சமீபத்திய Realme 5 அப்டேட்டிற்கான பதிப்பு எண் RMX1911EX_11_A.18 ஆகும்.
Realme 5 புதிய அப்டேட்டைப் பெறுகிறது
Realme 5 இப்போது இந்தியாவில் ஒரு புதிய அப்டேட்டைப் பெறுகிறது. மேலும் இது அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் (October Android security patch) கொண்டு வருகிறது. சமீபத்திய அப்டேட் dark mode, wide-angle video shooting மற்றும் பிற கேமரா மேம்பாடுகளையும் கொண்டு வருகிறது. பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படுவதைத் தடுக்கும் ஒரு முக்கியமான சிக்கலுக்கான தீர்வையும் இது கொண்டு வருகிறது. Realme XT, Realme 3 Pro, Realme C2, Realme 5 Pro மற்றும் பழைய சாதனங்களான Realme 1 மற்றும் Realme U1 போன்ற பல சாதனங்களுக்கு ரியல்மே கணினி அளவிலான இருண்ட பயன்முறையை (dark mode) உருவாக்கி வருகிறது.
இருண்ட பயன்முறையைப் (dark mode) பெற்ற சாதனங்களின் பட்டியலில் Realme 5 இப்போது சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்க Realme மன்றங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்த சமீபத்திய அப்டேட்டிற்கான பதிப்பு எண் RMX1911EX_11_A.18 ஆகும். மேலும் குறிப்பிட்டுள்ளபடி, இது அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. பயனர்கள் தங்கள் Realme 5-ஐ தங்கள் தொலைபேசிகளில் வந்தவுடன் மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். வலுவான வைஃபை இணைப்பின் கீழ் போன் சார்ஜில் இருக்கும் போது பதிவிறக்குங்கள். அதன் மென்பொருள் ஆதரவு பக்கத்தில் Realme பகிர்ந்த மேனுவல் பதிவிறக்க இணைப்பும் உள்ளது. மேலும் நீங்கள் எளிய முறை (Simple mode) அல்லது மீட்பு முறை (Recovery mode) மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். மாற்றாக, அப்டேட்டின் இணைப்பு கீழே வழங்கப்படுகிறது:
Realme 5 November OTA update link
Realme 5 அப்டேட் கணினி அளவிலான இருண்ட பயன்முறையைக் (dark mode) கொண்டுவரும் என்று சேஞ்ச்லாக் (changelog) அறிவுறுத்துகிறது. இது தொலைபேசியின் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் பயனர்கள் grey scale interface-ஐ அனுபவிக்க அனுமதிக்கும். இந்த அப்டேட் wide-angle video recording-ஐ சேர்க்கிறது. மேலும் பின்புற பிரதான கேமராவின் brightness-ஐ மேம்படுத்துகிறது. அப்டேட் rear portrait mode-ல் low-light scene shooting மேம்படுத்துகிறது. பின்புற கேமராவின் முன்னோட்ட தெளிவை மேம்படுத்துகிறது. மேலும் முன் மற்றும் பின்புற கேமரா மூலம் பொருளின் முகத்தில் சத்த பிரச்சனையை மேம்படுத்துகிறது.
அப்டேட் தீம் ஸ்டோரில் (Theme Store) எழுத்துருவை மாற்றும் திறனையும், புதிய ரியல்ம் ஆய்வகத்தையும், அப்டேட்டுகளுக்கான அறிவிப்பு புள்ளிகளுக்கான ஆப்ஷனையும் தருகிறது. இது அறிவிப்பு மையத்தில் சிம் கார்டுகளுக்கு இடையில் விரைவான சுவிட்ச் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மேலும் ஹாட்ஸ்பாட் இயக்கப்பட்ட பிறகு நினைவூட்டலை நீக்குகிறது. செய்தி அறிவிப்புகளை நிராகரிக்க இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யும் திறனும், உலகளாவிய தேடல் அல்லது அறிவிப்பு மையத்திற்கான முகப்புத் திரையில் ஸ்வைப் செய்வதற்கான ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட், பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்யப்படுவதைத் தடுக்கும் சிக்கலுக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature