இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார், ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மாதவ் சேத்.
 
                Photo Credit: Flipkart
ரியல்மீ 5 ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது
ரியல்மீ 5 Pro, ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாவதற்கு முன்னதாக, அந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4 பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகவுள்ளது என்பதை ரியல்மீ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில், இந்த ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக பக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார், ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மாதவ் சேத்.
இந்த ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்48 மெகாபிக்சல் கேமரா தவிர்த்து, ஒரு 119 டிகிரி விரிந்த புகைப்படங்களை எடுக்கக்கூடிய அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஒரு 4cm மேக்ரோ கேமரா மற்றும் ஒரு டெப்த் சென்சார் கேமரா இடம் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 55 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இந்த ரியல்மீ ஸ்மார்ட்போன் அதிவேக ஸ்னெப்ட்ராகன் ப்ராசஸரை கொண்டுள்ளது எனக் தகவல் வெளியிட்டுள்ளது ரியல்மீ நிறுவனம். இதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னெப்ட்ராகன் 712 எஸ்.ஓ.சி அல்லது ஸ்னெப்ட்ராகன் 665 எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மாதவ் சேத் தனி டிவிட்டர் பதிவில் இந்த ரியல்மீ 5 ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் முதன்முறையாக ஒரு சக்திவாய்ந்த ப்ராசஸருடன் அறிமுகமாகவுள்ளது என்பதையும் கூறியுள்ளார். இது மீண்டும் ஸ்னெப்ட்ராகன் 665 எஸ்.ஓ.சி ப்ராசஸரைதான் எதிர்பார்க்க வைக்கிறது.
Some achievements on our technology journey
— Madhav '5'Quad (@MadhavSheth1) August 15, 2019
A. 1st to bring 48MP Quad camera smartphone in India
B. World's 1st Quad camera smartphone under 10k 1st in India
C. Powerful Qualcomm chipset 1st time ever launching in India
All on 20th Aug #ProudIndian#HappyIndependenceDay pic.twitter.com/r9xDQt7PwM
இதே ஸ்னெப்ட்ராகன் 665 எஸ்.ஓ.சி ப்ராசஸருடன் சியோமியின் Mi A3 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 21-ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மறுமுனையில் ரியல்மீயின் ரியல்மீ 5 Pro, ரியல்மீ 5 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                            
                                SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                        
                     Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                            
                                Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                        
                     Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report