Realme 5 Pro மற்றும் Realme X2 இப்போது ஒரு புதிய ColorOS அப்டேட்டைப் பெறுகின்றன. இது இரண்டு போன்களும் சமீபத்திய ஜனவரி ஆண்ட்ராய்டு 2020 பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. Realme 5 Pro-க்கான ColorOS அப்டேட்டிற்கான பதிப்பு எண் RMX1971EX_11_A.16. அதே சமயம் Realme X2 அப்டேட்டின் பதிப்பு எண் RMX1992EX_11.A.18 ஆகும். Realme 5 Pro அப்டேட் ரிலையன்ஸ் ஜியோ VoLTE கால் டிராப் சிக்கலுக்கான தீர்வையும் தருகிறது. மேலும், Realme X2 அப்டேட் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி வீடியோ காலிங் போது, பிழை சிக்கலை உடனடியாக சரிசெய்கிறது.
Realme 5 Pro மற்றும் Realme X2 போன்கள் இப்போது ஜனவரி 2020 OTA அப்டேட்டைப் பெறுகின்றன என்று அறிவிக்க, நிறுவனம் மன்றங்களுக்கு அழைத்துச் சென்றது. இந்த அப்டேட் ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன், பிற திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. Realme 5 Pro அப்டேட்டின் அளவு 2.82 ஜிபி மற்றும் Realme X2 அப்டேட்டின் அளவு 2.56 ஜிபி ஆகும். இந்த அப்டேட்டுகளை நீங்கள் பெற்றவுடன் அவற்றை இன்ஸ்டால் செய்யவும், வலுவான வைஃபை இணைப்பில் பதிவிறக்கம் செய்து போன் சார்ஜில் இருக்கும்போது இன்ஸ்டால் செய்யவும் பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், அதை Settings-ல் மேனுவலாக சரிபார்க்கவும். மென்பொருள் பக்கத்தில் இரண்டு போன்களுக்கும் ஒரு கையேடு பதிவிறக்க இணைப்பு உள்ளது. Simple Mode அல்லது Recovery Mode-ஐப் பயன்படுத்தி நீங்கள் அதை இன்ஸ்டால் செய்யலாம். மேலும் முழு செயல்முறையும், மென்பொருள் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
சேஞ்ச்லாக்ஸ் பற்றிய விவரங்களுக்கு, Realme 5 Pro ஜனவரி 2020 OTA அப்டேட் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு, ஜியோ VoLTE கால் டிராப் சிக்கலுக்கான பிழைத்திருத்தம் மற்றும் மூன்றாம் தரப்பு விளையாட்டு செயலிக்கான பிழைத்திருத்தம், பின்னணியில் பூட்டப்பட்டிருக்கும் போது தானாகவே சுத்தம் செய்யப்படுகிறது. Realme X2 ஜனவரி 2020 OTA அப்டேட், சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு, புதுப்பிக்கப்பட்ட சார்ஜிங் அனிமேஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுவருகிறது. அங்கு 20 விநாடிகள் சார்ஜ் செய்தபின் தசம புள்ளி காண்பிக்கப்படாது. இந்த அப்டேட், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளில் இருக்கும்போது பிழை சிக்கலையும் உடனடியாக சரி செய்கிறது. மேலும், ஆல்பம் கேச் டேட்டா நீக்குதலுக்கான சிக்கலும் சரி செய்யப்பட்டது. கடைசியாக, Realme X2 அப்டேட் Settings-ல் உகந்த navigation மெனுவைக் கொண்டுவருகிறது.
இரண்டு போன்களுக்கான அப்டேடுகள் ஒரு கட்டமாக வெளிவருகின்றன என்று ரியல்மி குறிப்பிடுகிறது. சிக்கலான பிழைகள் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் சில நாட்களில் ஒரு பரந்த வெளியீடு தொடங்கப்படும். சிக்கலான பிழைகள் எதுவும் காணப்படவில்லை எனில், எதிர்வரும் நாட்களில் முழு வெளியீடு முடிக்கப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்