3ஜிபி ரேம் கொண்ட இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ரூ.8,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி 3 வெளியாகிய இரண்டு சேல்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, சுமார் 2,10,000 யுனிட்கள் வரை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாபெறும் வெற்றியைத் தொடர்ந்து ரியல்மி 3 இன்று மூன்றாவது முறையாக விற்பனைக்கு வெளியாகிறது.
இன்று (மார்ச் 19) சுமார் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. ரூ.8,999 முதல் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமரா மற்றும் 4,230mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரியல்மி 3 விலை இந்தியா:
இந்தியாவில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரியல்மி 3 மாடல் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வகையின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை கறுப்பு மற்றும் டைனாமிக் பிளாக் நிறங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் வரும் மார்ச் 26 முதல் ரேடியன்ட் நீல நிறத்தில் வெளியாகவுள்ளது ரியல்மி 3. மேலும் நிறுவனத்தின் சார்பில் வெளியான தகவலின்படி கறுப்பு, டைமண்ட் ப்ளூ மற்றும் மஞ்சள் நிறங்களில் போன் கேஸ்கள் வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்டு வசதி, கலர் ஓஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் ஹெச்டி திரையையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.1 ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ SoC வசதியைப் பெற்றுள்ளது. 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது பிரமாண்டமான இரண்டு பின்புற கேமராக்களுடன் கலக்குகிறது.
13/2 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ள நிலையில், ஹெச்டிஆர், ஃபேஸ் அன்லாக் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4,230mAh பவருடன் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்