Photo Credit: ஃபிளிப்கார்ட்
ரியல்மி 3 போனில் 'வாட்டர் டிராப்' ஸ்டையில் திரை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ரியல்மி தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் டீசர் ஃபிளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் ரியல்மி போனின் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் கசித்துள்ளது. இந்த டீசர் மூலம் வெளியான தகவல்படி, இந்த போனில் 12mn மீடியாடெக் ஹூலியோ பி70 பிராசஸரை பொருத்தப்பட்டிருப்பதை நாம் அறியலாம்.
இந்தியாவில் வரும் மார்ச் 4 ஆம் தேதி ரியல்மி 3 அறிமுகமாகும் நிலையில் இத்துடன் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் 'வாட்டர் டிராப்' ஸ்டையில் நாட்ச் இந்த போனில் இடம்பெறும் என்றும் 4,230mAh பேட்டரி வசதியும் இதில் இருக்கலாம் எனவும் எதிர்பார்கப்படுகிறது.
இந்த பேட்டரியின் ஆற்றல், நேற்று வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்களை விட அதிகமாகவே இருக்கிறது. இந்த போனில் விலை பற்றிய சரியான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் 'நம்பமுடியாத விலை' கொண்டு விற்பனை செய்யப்படும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. ரியல்மி 3-ஐப் பொறுத்தவரை ஏற்கெனவே இரண்டு பின்புற கேமராக்கள் இருப்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் பின்புறத்தில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரியல்மி போன்கள் நேற்று ரீலிசான ரெட்மி தயாரிப்புகளுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்