Photo Credit: Realme
Realme 14 Pro+ 5G ஆனது Bikaner Purple, Pearl White மற்றும் Suede Gray நிறங்களில் வருகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Realme 14 Pro+ 5G செல்போன் பற்றி தான்.
Realme 14 Pro+ 5G செல்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் Realme 14 Pro 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது . ஆரம்பத்தில், இந்த போன் 8GB ரேம்+128GB மெமரி, 8GB+256GB, மற்றும் 12GB+256GB உள்ளிட்ட மூன்று RAM மற்றும் சேமிப்பக மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Realme நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 512GB மாடலை வெளியிட்டுள்ளது. Realme 14 Pro+ 5G ஆனது Snapdragon 7s Gen 3 SoC சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. பெரிஸ்கோப் ஷூட்டர் உடன் கூடிய 50-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வருகிறது.
Realme 14 Pro+ 5G ஸ்மார்ட்போனின் புதிய 12GB ரேம்+ 512GB மெமரி மாடல் விலை ரூ. 37,999 என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது பேர்ல் ஒயிட் மற்றும் சூட் கிரே வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் மார்ச் 6 ஆம் தேதி Flipkart, Realme India e-store மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடை வழியாக நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் விற்பனை நாளில் வாடிக்கையாளர்கள் ரூ. 3,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் Realme 14 Pro+ 5G விலை 8GB ரேம் + 128GB மெமரி மாடல் ரூ. 29,999ல் தொடங்குகிறது. அதே நேரத்தில் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB மாடல்கள் முறையே ரூ. 31,999 மற்றும் ரூ. 34,999 ஆகும். இந்த போன் பிகானர் ஊதா நிறத்திலும் கூடுதலாக Pearl White மற்றும் Suede Grey நிறத்திலும் விற்பனைக்கு வருகிறது.
Realme 14 Pro+ 5G ஸ்மார்ட்போன் 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4nm ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15-அடிப்படையிலான Realme UI 6.0 உடன் வருகிறது. கேமரா பொறுத்தவரை, Realme 14 Pro+ ஆனது 50-மெகாபிக்சல் 1/1.56-இன்ச் Sony IMX896 முதன்மை பின்புற சென்சார் கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்டுள்ளது. இது 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 3x ஆப்டிகல் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் சப்போர்ட் உடன் 50-மெகாபிக்சல் Sony IMX882 பெரிஸ்கோப் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த கைபேசியில் முன்புறத்தில் 32-மெகாபிக்சல் சென்சார் உள்ளது. Realme 14 Pro+ 5G ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் 80W வயர்டு ஃபாஸ்ட்-சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்