Photo Credit: Gadgets 360
Realme 13 Pro+, Realme 13 Pro உடன் இணைந்து இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக சீனாவின் தொலைத்தொடர்பு சான்றிதழ் ஆணையத்தால் TENAA சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Realme 13 Pro Plus ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) சான்றிதழைப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Realme 13 Pro+ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 120Hz வேகத்தில் புதுப்பிப்பு வீதம் உள்ளது. Snapdragon 7s Gen 3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு திறன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14ல் இயங்கக்கூடும் என தெரிகிறது.
இணையதளத்தில் பகிரப்பட்ட Realme 13 Pro+ படங்களை பார்க்கும் போது பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட வடிவ கேமராவை கொண்டுள்ளது. மூன்று கேமரா அமைப்பு மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,050mAh பேட்டரி மூலம் இயங்குகிறது.
Realme வலைத்தளத்தின்படி இது முதல் தொழில்முறை AI கேமரா ஃபோன் என்று அழைக்கப்படுகிறது. கேமராவில் "Hyperimage+" பிராண்டிங்கைக் கொண்டுள்ளது. பிரைமரி கேமரவானது Sony IMX882 3x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் சென்சாருடன் இருக்கும் என தெரிகிறது. Realme 13 Pro+ 161.34 x 73.91 x 8.23mm என்ற அளவிலும் பேட்டரியுடன் 190g எடையுள்ளதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்