Qualcomm நிறுவனம் கைமாறினால், அதன் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கும் `சிவியரன்ஸ் கேஷ்' என்று கூறப்படும் தக்க இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் Qualcomm நிறுவனம் கைமாறினால், துணை தலைவர் மற்றும் அதற்கும் மேலே இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பளத்தின் 1.5 மடங்கும், வருடாந்திர போனஸும் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கப்படும். மேலும், அவர்கள் மருத்தவக் காப்பீட்டுக்குத் தேவையான ஒரு தொகையும் குறிப்பிட்ட காலம் வரை வழங்கப்படும்.
இதுவரை Qualcomm நிறுவனத்தில் துணைத் தலைவருக்குக் கீழே இருந்தவர்களுக்குத் தான் இதைப் போன்ற சலுகைகள் இருந்தன. ஆனால், முதன் முறையாக உயரிய பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த சலுகைகளை நீட்டிப்பு செய்துள்ளது Qualcomm.
கடந்த டிசம்பர் மாதம் தான், நிறுவனத்தின் துணை தலைவருக்குக் கீழே இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்படிப்பட்ட சலுகையைத் தருவது குறித்து முடிவெடுக்கப்பட்டு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், Qualcomm நிறுவனத்தை வாங்க இருந்த Broadcom நிறுவனம் இதை எதிர்த்தது. இந்த புதிய வழிமுறைகள் மூலம், Qualcomm நிறுவனத்தை வாங்குவது கடினமாகிவிடும் என்று Broadcom எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், Broadcom நிறுவனத்தின் எண்ணத்துக்கு கடந்த மார்ச் மாதம் பேரிடி விழுந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், Broadcom நிறுவனம் Qualcomm-ஐ வாங்குவதற்கு தடை போட்டார். ஆனாலும், Qualcomm இதைத் தாண்டியும் பல பிரச்னைகள் இருப்பதாக சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்