போகோ X3 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் கூடிய பிரைம் கேமரா உள்ளது.
Photo Credit: Twitter/ Angus Kai Ho Ng
Poco X3 ஸ்மார்ட்போனில் உள்ள 64 மெகா பிக்சல் கேமரா தரம்
போகோவின் புத்தம் புதிய X3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகின.
இதற்கு முன்பு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான போகோ X2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது போகோ X3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இதுதொடர்பாக போகோவின் டுவிட்டர் பக்கத்தில் போகோ X3 டீஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போகோ X3 ஸ்மார்ட்போனில் 64 மெகா பிக்சலுடன் கூடிய பிரைம் கேமரா உள்ளது.
மேலும், இந்த கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வெளிவந்துள்ளன. நல்ல ISO உணர்திறன், வயிட் பேலன்ஸ், அப்பாச்சர், எக்ஸ்போசர் மதிப்பு ஆகியவை நல்ல திறன் வாய்ந்ததாக தெரிகிறது.
முன்னதாக போகோ X3 ஸ்மார்ட்போனில் கேமரா செட்அப் எப்படி இருக்கும் என்று டுவிட்டரில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விடையளிக்கும் வகையில், போகோ X3 ஸ்மார்ட்போனின் கேமரா படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது..
மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் சார்ஜ் ஏறுவதற்கு 65 நிமிடங்கள் வரையில் ஆகும். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 33W சார்ஜிங் ஆதரவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி போகோ X3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம். இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Poco M2 Pro: Did we really need a Redmi Note 9 Pro clone? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset