போகோ F1 ஸ்மார்ட் போனுக்கு இன்னொரு விலைக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. F1-ன் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வகைக்கு இந்த விலைக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விலையை எம்ஐ.காம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் பெற முடியும். 22,999 ரூபாய் இருந்த போகோ F1 விலை தற்போது 2000 ரூபாய் குறைக்கப்பட்டு 20,999 ரூபாயாக உள்ளது. F1 போனில், டூயல் ரியர் கேமரா, வைட் நாட்ச், ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி, 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
விலை குறைக்கப்பட்ட போகோ F1 விவரம்:
சியோமியின் துணை நிறுவனமான போகோ, ட்விட்டர் மூலம் இந்த விலைக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளது. போகோ F1 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதி, முதன்முறையாக அறிமுகப்படுத்தும் போது 23,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 22,999 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அது 20,999 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் நீலம், கிராஃபைட் கருப்பு, ரோஸோ சிவப்பு வண்ணங்களில் இந்த போனை வாங்கலாம்.
அதே நேரத்தில் போகோ F1-ன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி வகைகள் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனையைத் தொடரும். இந்த இரண்டு போன்களின் விலைகள் முறேயே 19,999 ரூபாய் மற்றும் 27,999 ரூபாய் ஆகும். ஃப்ளிப்கார்ட், எம்.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர் கடைகளில் இந்த போன்கள் கிடைக்கும்.
போகோ F1 சிறப்பம்சங்கள்:
6.18 இன்ச் முழு எச்.டி+ திரை, 500 நிட்ஸ் ப்ரைட்னெஸ், குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி ப்ராசஸர் வசதிகளைப் பெற்றுள்ளது F1.
கேமார பிரிவைப் பொறுத்தவரை போனின் பின்புறத்தில் 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக 20 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் போகோ F1 இயங்குகிறது. 4000 எம்.ஏ.எச் பேட்டரியால் F1 பவரூட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்