Photo Credit: Poco
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Poco C75 செல்போன் பற்றி தான்.
Poco C75 அடுத்த வாரம் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என Xiaomi நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய சி சீரிஸ் செல்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அடங்கிய போஸ்டரை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் Poco பகிர்ந்துள்ளது. இது 50-மெகாபிக்சல் இரட்டை கேமரா யூனிட் மற்றும் 5,160mAh பேட்டரியுடன் வருகிறது. Poco C75 ஆனது Redmi 14C மாடலின் மாற்றாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு வகையான ரேம் மற்றும் மெமரி கட்டமைப்புகளில் கிடைக்கும்.
Poco C75 செல்போன் அக்டோபர் 25 ஆம் தேதி உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 6.88-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5,160mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும்.
வெளியான தகவல்கள்படி, Poco C75 ஆனது 6GB RAM + 128GB மெமரி மாடல் தோராயமாக ரூ. 9,100 விலையில் அறிமுகம் ஆகும். 8GB RAM + 256GB மெமரி மாடல் ரூ. 10,000 விலையில் கிடைக்கும். கருப்பு, தங்கம் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். Redmi 14C செல்போனை போலவே வட்ட வடிவ பின்புற கேமரா யூனிட் கொண்டிருக்கும் என வெளியான போஸ்டர் தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் மாதம் அறிமுகமான Redmi 14C செல்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் ரூ. 3,699 விலையில் கிடைத்தது. அதே போன்ற திறன்கள் மேம்படுத்தப்பட்டு Poco C75 செல்போன் மாடலில் சேர்க்கப்பட்டுள்ளது. 8GB ரேம் + 256GB மெமரி மாடல் அப்போது 13,700 ரூபாய் விலையில் கிடைத்தது. Redmi 14C போலவே Poco C75 ஆனது MediaTek Helio G85 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு இது 13 மெகாபிக்சல் முன் பக்க கேமராவை கொண்டிருக்கும். 18W திறனில் சார்ஜிங் சப்போர்ட் செய்யும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்டு HyperOS மூலம் இயக்கப்படும். புளூடூத், வைஃபை மற்றும் என்எப்சி இணைப்பு அம்சங்கள் இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 10,000 ரூபாய்க்கு குறைவான சந்தையில் ஏற்கனவே Galaxy F14 5G , Redmi 12 , Realme C53 மற்றும் பல சாதனங்கள் நிறைந்துள்ளது. அவைகளுக்கு போட்டியாக Poco C75 இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்