பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும், முன்புறத்திலும் ஒரே ஒரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கூகள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் $349 (இந்திய மதிப்பில் ரூ. 26,300) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கூகுள் தரப்பில் இதற்கு முன்பு வெளியான 3a ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், பிக்சல் 4a என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக்சல் போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அல்காரிதம் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது, கூகுள் தரப்பில் பிரத்யேக அல்காரிதம், செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு போட்டோ எடுத்ததும், அது அல்காரிதம் செய்யப்பட்டப் பின்னரே நமக்கு கிடைக்கிறது. இதனால், அதிலுள்ள ஒரு போட்டோவின் தரம் மிகச்சிறப்பாக இருக்கும்.
தற்போது அறிமுகமாகியுள்ள பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும், முன்புறத்திலும் ஒரே ஒரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நல்ல தரத்துடன் காணப்படுகிறது. மேலும், டைட்டன் M செக்யூரிட்டி, 3.5mm ஹெட்போன் ஜேக், பின்புறத்தில் விரல்ரேகை சென்சார் ஆகியவை உள்ளன.
கூகுள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்:
இதில் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், USB டைப் சி, 3.5மிமி ஜேக் உள்ளன. கூடுதல் சிறப்பம்சங்களாக அசிலோமீட்டர், லைட் சென்சார், பேரோமீட்டர், கைரோஸ்கோப், மேக்னட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், விரல் ரேகை சென்சார்கள் உள்ளன.
இதில் 3,140mAh பேட்டரியும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 18W ஃபாஸ்ட் சார்ஜரும் வஒங்கப்படுகிறது. இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு மைக்குகள் உள்ளன. இதன் எடை 143 கிராம் ஆகும்.
கூகள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் $349 (இந்திய மதிப்பில் ரூ. 26,300) என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் அமெரிக்காவில் முன்பதிவு செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கூகுள் ஸ்டோர் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நாடுகளிலும், அமேசான், பெஸ்ட் பை போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கிலும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அக்டோபர் மாதம் ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வரும் என்று செய்திகள் வந்துள்ளன.
கூகுள் பிக்சல் 4a ஸ்மாரட்போன் ஒரே ஒரு கலர் வேரியன்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஜெட் பிளாக் கலர் ஆகும். இந்தியாவில் இந்த போனின் விலை குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket