Oppo Reno S-ன் விலை ரூ. 40,000 அல்லது அதற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Oppo Reno S, fast charging-ஐ ஆதரிக்கும்
Oppo ஒரு புதிய Reno ஸ்மார்ட்போன் வேரியண்ட்டில் செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தக்கூடும். புதிய ஆன்லைன் கசிவின் படி, புதிய Oppo Reno S வரும்போது, SuperVOOC 2.0 fast charging தொழில்நுட்பம் மற்றும் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரதான சென்சாரை இந்த போன் ஆதரிக்கும் என்று தெரிகிறது. Oppo Reno S-ன் விலையும் ஆன்லைனில் கசிந்துள்ளது.
புதிய 91 மொபைல்கள் அறிக்கையின்படி, இந்தியாவில், Oppo Reno S-ன் விலை ரூ. 40,000 அல்லது அதற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும், இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. Oppo Reno Ace-ல் 13 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார்கள் தவிர, 48 மெகாபிக்சல் பிரதான சென்சார் உள்ளது.
Oppo Reno Ace போலவே Oppo Reno S, 65W SuperVOOC 2.0 fast charging தொழில்நுட்பத்தை வெளியிடும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அதிக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ள, Oppo Reno S, Snapdragon 855 SoC அல்லது புதிய Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது என்றால் அது ஆச்சரியமல்ல.
வெறும் 90 நாட்களில் ஏழு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், உலகளவில் 17 மில்லியன் பயனர்களை நிறுவனம் தற்போது அனுபவித்து வருகிறது என்று ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் சமீபத்தில் வெளிப்படுத்தினார். அவர் சந்தை சார்ந்த எந்த தரவையும் வெளியிடவில்லை. மேலும், இந்தியாவில் எத்தனை ரியல்மே பயனர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரியல்மி 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 15 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஜூன் மாதத்தில் ஒரு ஊடக நேர்காணலில் ஷெத் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, நிச்சயமாக இந்த நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாகும், பிராண்டின் முதல் தொலைபேசியை மற்ற பிராந்தியங்களுக்கு முன்னால், இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date