Oppo Reno Ace நாளைக்கு ரிலீஸ்!

Qualcomm Snapdragon 855+ SoC உடன் வருகிறது Oppo Reno Ace

Oppo Reno Ace நாளைக்கு ரிலீஸ்!

Photo Credit: Weibo/ iQoo

Oppo Reno, 90Hz display அம்சத்தைக் கொண்டது.

ஹைலைட்ஸ்
  • 90Hz display-வைக் கொண்டுள்ளது
  • 12GB RAM மற்றும் 256GB UFS 3.0 ஸ்டோரேஜ் உள்ளது
  • quad-camera அமைப்பைக் கொண்டுள்ளது
விளம்பரம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Oppo சீனாவில் Reno Ace அறிமுகப்படுத்தப்போவதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் அக்டோபர் 10 ஆம் தேதி ஒரு வெளியீட்டு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது. அங்கு Reno Ace மற்றும் சாதனத்தின் குண்டம் பதிப்பையும் (Gundam Edition) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஒப்போவின் துணைத் தலைவர் Brian Shen, Oppo Reno Ace-ன் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் Snapdragon 855+ SoC மற்றும் 90Hz display ஆகிய முக்கிய விவரங்கள் அடங்கும்.

Oppo Reno Ace குண்டம் பதிப்பில் (Gundam Edition)-ல் 90Hz display உடன் 135Hz sampling rate அம்சம் இடம்பெறும். இந்த சாதனத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி UFS  3.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் வசதி இருக்கும்.

Oppo Reno Ace குண்டம் பதிப்பு (Gundam Edition)-ல் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவில் quad camera அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதையும் Weibo ஒரு பதிவை வெளிப்படுத்துகிறது. இது Dual-WiFi-கான ஆதரவையும் கொண்டிருக்கும்.

Weibo-வில், இந்த போன் 18W PD-யை ஆதரிப்பது மட்டுமல்லாமல், 18W Quick Charge, அதே போன்று 20W VOOC Flash Charge ஆகியவற்றிற்கான ஆதரவையும் வழங்கும் என்று Shen குறிப்பிட்டுள்ளார். இது ஸ்மார்ட்போனில் 65W charging ஆதரவைக் குறிக்கும் முந்தைய அறிக்கைக்கு முரணானது. இந்த சாதனம் விளையாடும்போது வெப்பமடையாமல் இருக்க உதவுவதற்கு வெப்பச் சிதறலை மேம்படுத்தியுள்ளனர்.

Oppo Reno Ace-ல் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என்று Shen கூறுகிறார். முந்தைய கசிவுகளின் அடிப்படையில், Oppo Reno Ace-ல் quad camera அமைப்புடன், 48-megapixel sensor, 13-megapixel sensor, 8-megapixel sensor மற்றும் 2-megapixel sensor ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஸ்மார்ட்போன் 161.0x75.7x8.7mm அளவிடும் மற்றும் 200 கிராம் எடையுள்ளதாக கூறப்படுகிறது. இது 6.5-inch AMOLED display உடன் full-HD+ resolution-ஐ பேக் செய்யும். மேலும் Oppo Reno Ace, 4,000mAh பேட்டரியில் இயங்கும்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »