இந்தியாவில் Oppo Reno 2F-வின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது. Oppo Reno 2F-வின் விலை ஆரம்பத்தில் ரூ.23,990-க்கு திருத்திய சீன நிறுவனம், சில மாதங்களிலேயே இந்த புதிய விலைக் குறைப்பு வந்துள்ளது.
இந்தியாவில் Oppo Reno 2F-வின் விலை ரூ. 23,990-யில் இருந்து ரூ. 21,990-யாக குறைக்கப்பட்டுள்ளது என்று Oppo India கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. திருத்தப்பட்ட விலை Amazon India இணையதளத்தில் அதிகாரப்பூர்வ பட்டியல் மூலம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் குறிப்பிட்டுள்ளபடி, நாட்டின் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் இது பொருந்தும்.
ஓப்போ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் Reno 2 மற்றும் Reno 2Z உடன் இணைந்து Reno 2F-ஐ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990. அதன் விலை கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.23,990-யாக குறைக்கப்பட்டது.
டூயல்-சிம் (நானோ) Oppo Reno 2Z, 19.5:9 aspect ratio மற்றும் Corning Gorilla Glass 4 protection உடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P70 (MT6771V) SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ஓப்போ போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48-மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ISOCELL GM1 சென்சார், f/2.2 lens உடன் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த கேமரா அமைப்பில் f/2.4 lenses உடன் இரண்டு 2-மெகாபிக்சல் சென்சார் அடங்கும். செல்ஃபிகளுக்காக, இந்த ஸ்மார்ட்போன் 16-மெகாபிக்சல் பாப்-அப் கேமராவுடன் வருகிறது.
ஓப்போ, 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை Reno 2F-க்கு வழங்குகிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்