கேமராவுக்கே சவால் விடும் 200MP லென்ஸ்! புது வரவு Oppo Reno 15 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 ஜனவரி 2026 17:31 IST
ஹைலைட்ஸ்
  • 200MP மெயின் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் வசதி
  • சக்திவாய்ந்த MediaTek Dimensity 8450 சிப்செட் மற்றும் 12GB RAM
  • 6500mAh பேட்டரி மற்றும் 80W SuperVOOC அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

இந்தியாவில் நிறுவனத்தின் ரெனோ வரிசையில் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி ஒரு புதிய மாடலாகும்.

Photo Credit: Oppo

இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு 'கேமரா ரெவல்யூஷன்' பத்திதான். ஒப்போ (Oppo) நிறுவனத்தோட ரெனோ சீரிஸ்னாலே கேமராவுக்குத்தான் பெயர் பெற்றது. இப்போ அந்த வரிசையில இன்னும் ஒரு படி மேல போய், Oppo Reno 15 Pro, Reno 15 Pro Mini மற்றும் Reno 15 ஆகிய மூன்று போன்களை இன்னைக்கு இந்திய சந்தையில அறிமுகம் செஞ்சிருக்காங்க. முதல்ல இந்த போன்களோட டிசைனைப் பத்தி சொல்லியே ஆகணும். இந்தியாவுல முதல் முறையா HoloFusion அப்படிங்கிற தொழில்நுட்பத்தை ஒப்போ கொண்டு வந்திருக்காங்க. இது போனோட பின்னாடி ஒரு 3D லேயர் எஃபெக்ட்டை தரும். பாக்குறதுக்கே செம மாடர்னா இருக்கும். அதுவும் அந்த 'கிளேசியர் ஒயிட்' (Glacier White) கலர் சும்மா மினுமினுங்குது பாஸ். 

டிஸ்ப்ளே - காம்பாக்ட் மற்றும் பிரம்மாண்டம்: 

இந்த முறை ஒப்போ செஞ்ச ஒரு பெரிய விஷயம் Reno 15 Pro Mini. சின்ன போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்காக 6.32 இன்ச் OLED டிஸ்ப்ளேவோட இது வருது. அதே சமயம் பெரிய ஸ்க்ரீன் வேணும்னா Reno 15 Pro-ல 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்கு. ரெண்டுமே 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. சூரிய வெளிச்சத்துல கூட தெளிவா தெரிய 1,800 நிட்ஸ் பிரைட்னஸ் கொடுத்திருக்காங்க. Reno 15 Pro மற்றும் Pro Mini ரெண்டுலயும் 200MP Ultra-Clear மெயின் கேமரா இருக்கு. இதுல இருக்குறது Samsung HP5 சென்சார். அதுமட்டும் இல்லாம, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மூலமா நீங்க தூரத்துல இருக்குற பொருளை கூட செம குவாலிட்டியா ஜூம் பண்ணி எடுக்கலாம். செல்ஃபிக்காக முன்னாடி ஒரு 50MP கேமரா கொடுத்திருக்காங்க. 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் வசதி இருக்கறதால, நீங்க ஒரு புரொபஷனல் வீடியோகிராஃபராவே மாறிடலாம். 

வேகமான பெர்ஃபார்மன்ஸ்: 

Pro மாடல்கள்ல MediaTek Dimensity 8450 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கு. இது ஒரு 'லேக் கில்லர்' (Lag Killer) சிப்செட். கேமிங் விளையாடும்போது போன் கொஞ்சம் கூட சூடாகாம இருக்க AI கூலிங் சிஸ்டமும் இருக்கு. ஸ்டாண்டர்ட் Reno 15 மாடல்ல Snapdragon 7 Gen 4 சிப்செட் இருக்கு. எல்லா போன்களும் Android 16 அடிப்படையிலான ColorOS 16-ல் இயங்குது. பேட்டரியைப் பொறுத்தவரை Reno 15 Pro-ல 6,500mAh மெகா பேட்டரி இருக்கு. மினி மாடல்ல 6,200mAh பேட்டரி இருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தாலும், போன் ரொம்ப ஸ்லிம்மா இருக்குறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி. கூடவே 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இருக்கு.

இந்திய விலை விவரம்:

●    Oppo Reno 15: ரூ. 45,999 முதல் தொடங்குகிறது.
●    Oppo Reno 15 Pro Mini: ரூ. 59,999 (12GB + 256GB).
●    Oppo Reno 15 Pro: ரூ. 67,999 (12GB + 256GB).

ஜனவரி 13-ம் தேதி முதல் இதற்கான ப்ரீ-ஆர்டர் (Pre-order) தொடங்குது. நீங்க ஒரு கேமரா பிரியர்னா, கண்டிப்பா இந்த போனை ஒரு முறை செக் பண்ணி பாருங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஃபோல்டபிள் போன் சந்தையில் போர் ஆரம்பம்! ஆப்பிள் ஐபோன் போல்டுக்கு போட்டியாக ஒப்போவின் 'வைடு' டிஸ்ப்ளே போன்
  2. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் OnePlus 13R - பிளிப்கார்ட்டின் மெகா டீல்
  3. சாம்சங்கின் புது பிளான்! மிரட்டலான சிறப்பம்சங்களுடன் வரும் Galaxy M17e - எதோட ரீபிராண்ட் தெரியுமா?
  4. ஒரு தடவை சார்ஜ் போட்டா 3 நாளைக்கு கவலை இல்ல! ஒன்பிளஸின் மெகா லான்ச் - Turbo 6 & 6V அதிரடி விலை மற்றும் விவரம்
  5. விவோவின் மெகா பிளான்! Vivo X200T-ல் நான்கு 50MP கேமராக்கள்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க வரும் புதிய மான்ஸ்டர்
  6. மிரட்டலான 7600mAh பேட்டரி.. 200MP கேமரா! iQOO Z11 Turbo-வின் சிறப்பம்சங்கள் லீக் - இந்தியாவிற்கு iQOO 15R ஆக வருமா?
  7. லேப்டாப் ஸ்க்ரீன் இப்போ விரியும்! லெனோவாவின் மேஜிக் Rollable Laptop மற்றும் SteamOS-ல் இயங்கும் Legion Go 2
  8. சாம்சங்குக்கு சரியான போட்டி! மோட்டோரோலாவின் புதிய 'மெகா' ஃபோல்டபிள் போன் - இதோ சிறப்பம்சங்கள்!
  9. ஷாக் பிரைஸ்! பட்ஜெட் விலையில் லெய்கா கேமரா போன் - சியோமி 14 சிவி அதிரடி விலைக்குறைப்பு
  10. சாம்சங் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! ஒரு லட்ச ரூபாய் போன் இப்போ வெறும் ரூ. 66,885-க்கு? அமேசான் ஆஃபர் விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.