Oppo Reno 15, Reno 15 Pro, மற்றும் புதிய Reno 15 Mini உள்ளிட்ட மூன்று மாடல்களின் இந்திய வெளியீட்டு காலக்கெடு மற்றும் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Oppo
Oppo Reno 15 Series டிசம்பரில் இந்தியாவில் வரும்; 200MP கேமரா, Dimensity 8450 உடன்
நம்ம ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்த Oppo Reno 15 சீரிஸ், இந்தியாவுல எப்போ லான்ச் ஆகப் போகுதுன்னு இப்போ ஒரு லீக் மூலம் வெளிய வந்திருக்கு. அதுமட்டுமில்லாம, இந்த சீரிஸ்ல புதுசா ஒரு காம்பாக்ட் மாடலும் வரப் போகுதாம். Oppo Reno 15 சீரிஸ் மொத்தம் மூணு மாடல்களாக வரலாம்: Reno 15 Pro, ஸ்டாண்டர்ட் Reno 15, மற்றும் புதுசா Reno 15 Mini. இந்த எல்லா மாடல்களும் டிசம்பர் 2025 கடைசி வாரத்துல இந்தியால அறிமுகமாகி, அடுத்த வருஷம் ஜனவரியோட முதல் அல்லது இரண்டாவது வாரத்துல விற்பனைக்கு வரலாம்னு சொல்லியிருக்காங்க.
இந்த சீரிஸ்லேயே ரொம்ப சுவாரஸ்யமான விஷயம், Reno 15 Mini தான். ஏன்னா, இது 6.32-இன்ச் ஸ்கிரீனோட ஒரு காம்பாக்ட் ஃபோனா வரப் போகுது. இப்போ எல்லாம் பெரிய போன்கள்தான் வந்துட்டு இருக்குற நேரத்துல, இப்படி ஒரு காம்பாக்ட் மாடல் வர்றது பழைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியா இருக்கும்.
இப்போ முக்கியமா கேமராவைப் பத்தி பேசணும். லீக்ஸ் சொல்றபடி, Reno 15 மற்றும் Reno 15 Mini இரண்டுலயும் மிரட்டலான கேமரா செட்டப் இருக்காம். அதுல 200MP Samsung ISOCELL HP5 Primary Sensor, கூடவே 50MP அல்ட்ரா-வைடு மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ்கள் இருக்க வாய்ப்பிருக்கு. ஒரு பட்ஜெட்-ஃபிளாக்ஷிப் மாடல்லேயே 200MP கேமரா கிடைக்கிறது ஒரு பெரிய விஷயம்! அதுமட்டுமில்லாம, முன்பக்கத்துல 50MP செல்பீ கேமராவும் எதிர்பார்க்கப்படுது.
பெர்ஃபார்மன்ஸைப் பத்தி பேசணும்னா, இந்த சீரிஸ்ல MediaTek Dimensity 8450 சிப்செட் இருக்கலாம்னு லீக் ஆகியிருக்கு. ஆனா, டாப்-எண்ட் மாடலான Reno 15 Pro-ல Dimensity 9400 SoC கூட வரலாம்னு ஒரு சில தகவல்கள் சொல்லுது. Reno 15 Mini-ல 6000mAh பேட்டரி இருக்கலாம்னு சொல்லப்படுது.
டிஸ்பிளே-வைப் பொறுத்தவரை, மூன்று மாடல்களும் 1.5K Resolution மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபிளாட் AMOLED டிஸ்பிளேக்களுடன் வரலாம். அதுமட்டுமில்லாம, இந்த சீரிஸ்ல IP68 மற்றும் IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் கூட கொடுக்க வாய்ப்பிருக்குனு சொல்லியிருக்காங்க.
விலையைப் பொறுத்தவரை, Reno 15-ன் ஆரம்ப விலை ₹39,990-க்கு அருகிலும், Reno 15 Pro-ன் விலை ₹49,990-க்கு அருகிலும் இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. Reno 15 Mini-ன் விலை இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்கும்னு சொல்லியிருக்காங்க.மொத்தத்துல, Reno 15 Mini-ன் அறிமுகம் மற்றும் 200MP Camera அப்கிரேட்-னு Oppo Reno 15 சீரிஸ் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கு. இந்த போன் பத்தி உங்க கருத்து என்ன? இந்த Reno 15 Mini-ஐ நீங்க வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Axis Bank Introduces Aadhaar Face Authentication: How to Update Your Axis Bank Mobile Number
Meghalaya Government Signs MoU With Starlink to Boost Connectivity in Region and Reduce Digital Divide
Samsung Galaxy A27 5G Visits Geekbench With Older Snapdragon 6 Gen 3 Chip, 6GB RAM