4 ஜி.பி ரேம், 64 ஜி.பி ஸ்டோரேஜ், 10,990 ரூபாய்க்கு புதிய ரியல்மீ 1

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 18 ஜூன் 2018 17:32 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ரியல்மீ 1 மொபைலின் புதிய மாடல் வெளியீடு
  • இதில் 4 ஜீபி ராம் மற்றும் 64 ஜீபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது
  • அமேசானில் மட்டுமே விற்பனை செய்யப்படும்

Realme 1 Moonlight Silver colour variant, seen from behind.

ஜியோமி ரெட்மி மற்றும் அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ 1 ஆகியவற்றிற்கு போட்டியாக ஓப்போ நிறுவனம் 4 ஜீபி ரேம் மற்றும் 64 ஜீபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய புதிய ரியல்மீ 1 மொபைலை இன்று  வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் அமேசானில் விற்பனைக்கு வந்தது. 

இந்த புதிய மாடலில் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அவை டைமண்ர் பிளாக், சோலார் ரெட் மற்றும் லிமிடெட் எடிஷன் மூன்லைட் சில்வர். ஓப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஆன்லைனில் மட்டும் வெளியிடப்படும் ரியல்மீ 1 கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மீ 1-ன் புதிய மாடல் தற்போது விறபனைக்கு வந்தது. இந்த ஓப்போ தயாரிப்பு எக்ஸ்க்ளூசிவாக அமேசானில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. இது “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.. 

புதிய ஓப்போ ரியல்மீ 1, 4 ஜீபி ரேம், 64 ஜீபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது. இது திங்கள்கிழமை முதல் அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது ஏற்கனவே வெளியிடப்பட்ட 3 ஜீபி ரேம்/ 32 ஜீபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜீபி ரேம்/ 128 ஜீபி ஸ்டோரேஜ் என இரண்டு ரியல்மீ 1 மாடல்களுடன் விற்பனைக்கு கிடைக்கும்.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றங்களை தவிர்த்து, புதிய ரியல்மீ1 அதனுடைய முந்தைய மாடல்களைப் போல் இருக்கின்றது. டுயல் சிம் வசதியுடன் ஆண்ட்ராய்ட் வெர்சன் 8.1 ஓரியோ அடிப்படையாகக், கொண்ட கலர் ஓஎஸ் 5.0-ல் இயங்குகிறது. மேலும் 6 இன்ச் ஹெச்.டி (1080x2160 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் ஆக்டோ கோர் மிடியா டெக் ஹூலியோ P60 SoC ப்ராஸசர் உடன் 3 ஜீபி, 4 ஜீபி மற்றும் 6 ஜீபி மாடல்கள், அதோடு டுயல் கோர் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelleigence (AI)) சிப் உள்ளது. மேலும் இதில் 13 மெகா பிக்ஸல், எல்ஈடி ஃப்ளாஷ் கொண்ட ரியர் கேமராவும், 8 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் இருக்கிறது. இதில் ஓப்போ ஏஐ பியூட்டி 2.0 என்கிற வசதியும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் .ஒரே விநாடியில் அன்லாக் செய்யக்கூடிய ஃபேஸ் அன்லாக் வசதியும் இதில் இருக்கிறது. 

ரியல்மீ 1 மாடலில் 32 ஜீபி, 64 ஜீபி, 128 ஜீபி ஸ்டோரேஜ் வசதியும் இருக்கிறது. தொடர்புக்கு 4ஜி வோல்ட். வைஃபை 802.11, ப்ளூடூத், ஜீபிஎஸ்/ ஏ - ஜீபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி, எஃப்.எம் ரேடியோ மற்றும் 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜேக் உள்ளது. 3410 எம்.ஏ.ஹெச் கொண்ட, ஏஐ டெக்னாலஜியோடு பேட்டரி வருகிறது. மேலும் ஏஐ போர்ட் அசிஸ்டெண்ட் வசதியும் உள்ளது. 

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Great performance
  • Value for money
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • No fingerprint sensor
  • Cluttered OS
 
KEY SPECS
Display 6.00-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3410mAh
OS Android 8.1
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Realme
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.