ஜியோமி ரெட்மி மற்றும் அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ 1 ஆகியவற்றிற்கு போட்டியாக ஓப்போ நிறுவனம் 4 ஜீபி ரேம் மற்றும் 64 ஜீபி ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய புதிய ரியல்மீ 1 மொபைலை இன்று வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் அமேசானில் விற்பனைக்கு வந்தது.
இந்த புதிய மாடலில் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அவை டைமண்ர் பிளாக், சோலார் ரெட் மற்றும் லிமிடெட் எடிஷன் மூன்லைட் சில்வர். ஓப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஆன்லைனில் மட்டும் வெளியிடப்படும் ரியல்மீ 1 கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மீ 1-ன் புதிய மாடல் தற்போது விறபனைக்கு வந்தது. இந்த ஓப்போ தயாரிப்பு எக்ஸ்க்ளூசிவாக அமேசானில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. இது “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன் ஆகும்..
புதிய ஓப்போ ரியல்மீ 1, 4 ஜீபி ரேம், 64 ஜீபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 10,990 என நிர்ணயிக்க்ப்பட்டுள்ளது. இது திங்கள்கிழமை முதல் அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது ஏற்கனவே வெளியிடப்பட்ட 3 ஜீபி ரேம்/ 32 ஜீபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜீபி ரேம்/ 128 ஜீபி ஸ்டோரேஜ் என இரண்டு ரியல்மீ 1 மாடல்களுடன் விற்பனைக்கு கிடைக்கும்.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றங்களை தவிர்த்து, புதிய ரியல்மீ1 அதனுடைய முந்தைய மாடல்களைப் போல் இருக்கின்றது. டுயல் சிம் வசதியுடன் ஆண்ட்ராய்ட் வெர்சன் 8.1 ஓரியோ அடிப்படையாகக், கொண்ட கலர் ஓஎஸ் 5.0-ல் இயங்குகிறது. மேலும் 6 இன்ச் ஹெச்.டி (1080x2160 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் ஆக்டோ கோர் மிடியா டெக் ஹூலியோ P60 SoC ப்ராஸசர் உடன் 3 ஜீபி, 4 ஜீபி மற்றும் 6 ஜீபி மாடல்கள், அதோடு டுயல் கோர் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelleigence (AI)) சிப் உள்ளது. மேலும் இதில் 13 மெகா பிக்ஸல், எல்ஈடி ஃப்ளாஷ் கொண்ட ரியர் கேமராவும், 8 மெகா பிக்ஸல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் இருக்கிறது. இதில் ஓப்போ ஏஐ பியூட்டி 2.0 என்கிற வசதியும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் .ஒரே விநாடியில் அன்லாக் செய்யக்கூடிய ஃபேஸ் அன்லாக் வசதியும் இதில் இருக்கிறது.
ரியல்மீ 1 மாடலில் 32 ஜீபி, 64 ஜீபி, 128 ஜீபி ஸ்டோரேஜ் வசதியும் இருக்கிறது. தொடர்புக்கு 4ஜி வோல்ட். வைஃபை 802.11, ப்ளூடூத், ஜீபிஎஸ்/ ஏ - ஜீபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி, எஃப்.எம் ரேடியோ மற்றும் 3.5 எம்.எம் ஹெட்ஃபோன் ஜேக் உள்ளது. 3410 எம்.ஏ.ஹெச் கொண்ட, ஏஐ டெக்னாலஜியோடு பேட்டரி வருகிறது. மேலும் ஏஐ போர்ட் அசிஸ்டெண்ட் வசதியும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்