அமேசான் நிறுவனத்தின் விற்பனை தளத்தில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்பொன் குறித்து ஒரு டீசர் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் 'ஒப்போ K3' ஸ்மார்ட்போன்தான் அறிமுகமாகிறது என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை
பாப்-அப் செல்பி கேமரா கொண்ட 'ஓப்போ K3' ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுக செய்யப்பட்டது. இன்னிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வருகை இந்திய சந்தைகளில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் அமேசான் நிறுவனத்தின் விற்பனை தளத்தில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்பொன் குறித்து ஒரு டீசர் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை பார்க்கையில், இது 'ஓப்போ K3' ஸ்மார்ட்போனைதான் குறிக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த டீசர் புகைப்படத்தில் திரை-உடல் விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் என அனைத்தும் 'ஓப்போ K3' ஸ்மார்ட்போனுடன் ஒத்துப்போகிறது. மேலும், '3.0' என அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, 'ஓப்போ K3' ஸ்மார்ட்போனனைத்தான் குறிக்கிறது என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த பக்கத்தில், எந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது, எப்போது அறிமுகமாகிறது என்பன பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
'ஓப்போ K3': எதிர்பார்க்கப்படும் விலை!
சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என்ற அளவுகளை கொண்ட இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,100 ரூபாய்) மற்றும் 2,299 யுவான்கள் (23.,100 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகின
![]()
'ஓப்போ K3': சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Star Wars: Fate of the Old Republic Will Launch Before 2030, Game Director Confirms
Motorola Edge 70 Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Triple Rear Cameras: Price, Specifications