இந்த மடங்கும் திரைகளை ஒன்றிணைத்தால் ஒரே திரையில் பார்கும் அனுபவம் கிடைக்கும்!
Photo Credit: Weibo/ Brian Shen
இரண்டு டிஸ்பிளே பேனல்களை கொண்ட ஓப்போவின் மடங்கும் ஸ்மார்ட்போன்
சாம்சங், ஹூவாய் நிறுவனங்கள் தங்களது புதிய அறிமுகங்களான 'மடங்கும் ஸ்மார்ட்போன்களை' வெளியிட்டதை தொடர்ந்து ஓப்போ நிறுவனமும் மடங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ நிறுவனத்தின் துனை தலைவர் பிரியன் ஷேன் கடந்த திங்கட்கிழமையன்று இந்த புதிய போனின் ஃபரோடோடைப் மாதிரியை வெளியிட்டார்.
ஏற்கெனவே அறிமுகமான ஹூவாய் மேட் X மாடலைப்போலவே, ஓப்போவின் இந்த மாதிரி ஃபரோடோடைப் வெளியாகியுள்ளது.
![]()
ஓப்போவின் ஃபோல்டபள் போனின் அமைப்புகள்:
ஓப்போ தளத்தில் வெளியான புகைப்படத்தில் வளையும் தன்மையுடைய திரையை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த போனின் திரை 8 இஞ்ச் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேனலின் ஒரு பக்கத்தில் அடர்த்தியான பார் ஒன்று இருப்பதும் அதில் கேமராக்கள் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் செஃல்பி கேமராக்கு ஏற்றவாறு ஒரு நாட்சுடன் இந்த மடங்கும் போன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓப்போவின் இந்த மாதிரி புகைப்படத்தில் இரண்டு எல்லிடி டார்ச்லைட்டுகள் இருப்பதையும் நம்மால் பார்க முடிகிறது.
உள்ளே கலர் ஓஎஸ் மென்பொருள் கொண்டு இந்த போன் செயல்படுவதாகவும், இந்தியாவில் ரூ. 2,09,400 க்கு வெளியாகும் ஹூவாய் மேட் X அல்லது ரூ. 1,41,000 க்கு வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஆகிய மடங்கும் போன்களை விட அதிக விலையிலே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November