16 மெகா பிக்சல் செஃல்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 855 Soc உடன் ஓப்போவின் பெயரில் ஒரு மர்மமான ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஓப்போவின் துணை இயக்குநர், பிரையன் ஷென், ஓப்போ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஸ்னாப்டிராகன் 855 Socயை கொண்டிருக்கும் என தகவலை சமீபத்தில் தெரிவித்த நிலையில் தற்போது இந்தப் புதிய அப்டேட் வந்துள்ளது.
மேலும், நிறுவனம் சார்பில் தெரிவித்த தகவல்படி, இந்த புதிய தயாரிப்பில் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் கேமரா (Hybrid Optical Zoom Camera) வசதி இருக்கும் எனப்படுகிறது. இந்தத் தயாரிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படலாம் என்றும் அது ஓப்போ 'ஃபைண்டு Z' என பெயரிப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இணையத்தில் கசிந்துள்ள புகைப்படத்தில் 'ஓப்போ மாடல் எண்: OP46C3' என குறிப்பிடப்பட்டதால் இந்த பெயரிடப்படாத போன் ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்க வாய்புள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த போனின் புகைப்படத்துடன் சில முக்கிய குறிப்புகளான 8 மட்டும் 256 ஜிபி ரேம் மற்றும் முழு ஹெச்டி திரை உள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.
16 மெகா பிக்சல் செஃல்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பின்புற கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் சென்சாரும் 4 இன் 1 பிக்சல் தொழிநுட்பமும் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த போனில் 4,065mAh பேட்டரி பவரும் இருக்க வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்