ஓப்போவின் Find சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! 

ஓப்போவின் Find சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! 

Oppo Find X2 Pro கருப்பு மற்றும் ஆரஞ்சு கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Oppo Find X2 Pro பெரிஸ்கோப் வடிவ லென்ஸுடன் வருகிறது
  • இரண்டு ஓப்போ போன்களும் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன
  • Oppo Find X2 Pro ஒரு வேகன் லெதர் பூச்சுடன் வருகிறது
விளம்பரம்

Oppo Find X2 Pro மற்றும் Find X2 ஆகியவை சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் சமீபத்திய முதன்மை போன்களாக வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு புதிய Oppo Find X2 மாடல்களும் 120Hz அல்ட்ரா விஷன் டிஸ்பிளேவுடன் வந்து ஹோல்-பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளன. Oppo Find X2 Pro, புதிய சீரிஸில், 10 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை இயக்கும் பெரிஸ்கோப் வடிவ லென்ஸையும் கொண்டுள்ளது. Oppo Find X2 சீரிஸ் கடந்த மாதம் அறிமுகமான சாம்சங்கின் Galaxy S20 சீரிஸுக்கு வலுவான போட்டியாளராகத் தெரிகிறது. 


Oppo Find X2 Pro, Find X2 விலை: 

Oppo Find X2 Pro-வின் ஒற்றை 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்டிற்கு EUR 1,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,67,300) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கருப்பு (பீங்கான்) மற்றும் ஆரஞ்சு (வேகன் தோல்) ஆப்ஷன்களில் வரும். இதற்கு மாறாக, Oppo Find X2, 12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனுக்கு EUR 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,400) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. போனை கருப்பு (பீங்கான்) மற்றும் ஓஷன் (கண்ணாடி) பதிப்புகள் உள்ளன. மேலும், இந்த இரண்டு போன்களும் மே மாத தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பிய சந்தைகளில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Oppo Find X2 Pro விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Oppo Find X2 Pro, கலர்ஓஎஸ் 7.1 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.7 இன்ச் கியூஎச்டி + (1,440x3,168 பிக்சல்கள்) அல்ட்ரா விஷன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் இது ஒரு கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த் போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு அட்ரினோ 650 GPU மற்றும் 12 ஜி.பி LPDDR5 ரேம் இணைக்கப்பட்டுள்ளது. 

Oppo Find X2 Pro-வில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில், f/1.7 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX689 சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/2.2 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் சோனி IMX586 சென்சார் மற்றும் பெரிஸ்கோப் வடிவ f/3.0 டெலிஃபோட்டோ லென்ஸுடன் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் f/2.4 லென்ஸுடன் 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

Oppo Find X2 Pro, 512 ஜிபி UFS 3.0 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இதை விரிவாக்க முடியாது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/A-GPS, NFC மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, barometer, magnetometer, colour temperature சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

Oppo Find X2 Pro, 65W சூப்பர் வூக் 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 4,260 எம்ஏஎச் பேட்டரியையைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போனின் பீங்கான் வேரியண்ட் 165.2x74.4x8.8 மிமீ அளவு மற்றும் 207 கிராம் எடையும், அதன் வேகன் லெதர் மாடல் 165.2x74.4x9.5 மிமீ அளவு மற்றும் 200 கிராம் எடையும் கொண்டது.


Oppo Find X2 விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Find X2 ஆனது, கலர்ஓஎஸ் 7.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது மற்றும் 6.7 இன்ச் கியூஎச்டி + (1440x3168 பிக்சல்கள்) அல்ட்ரா விஷன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 உள்ளது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 650 GPU மற்றும் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

oppo find x2 image Oppo Find X2

Oppo Find X2, 6.7-inch QHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது

Find X2-க்கு மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, ஆனால் 48 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX586 சென்சார் மற்றும் ஒரு f/1.7 லென்ஸ், 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சோனி IMX708 சென்சார் மற்றும் ஒரு f/2.2 லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் f/2.4 லென்ஸ். f/2.4 லென்ஸுடன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

Oppo Find X2, 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது விரிவாக்கத்தை ஆதரிக்காது. போனின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். உள் சென்சார்களில் accelerometer, ambient light sensor, barometer, magnetometer, colour temperature சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் 65W SuperVOOC 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த போன் 164.9x74.5x8.0 மிமீ அளவு கொண்டதாகும். இதன் பீங்கான் பதிப்பு 196 கிராம் எடையும், கிளாஸ் ஆப்ஷான் 187 கிராம் எடையும் ஆகும். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »