பிபிகே சீன தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய ப்ளாக்சிப் ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் இந்தியாவில் வெளியாக உள்ளது. ஒப்போ ஃபைண்ட் போன்களின் புதுப்பிக்கப்பட்ட இந்த வெளியீட்டில், கேமரா ஸ்லைடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் விலை
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன் 8 ஜிபி RAM 256 ஜிபி இன்பில்ட்டு ஸ்டோரேஜுடன் 59,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது. 3730mAh பேட்டரி, VOOC வேகமான சார்ஜிங் டெக்னாலஜி கொண்டுள்ளது. போர்டியக்ஸ் சிவப்பு, ஐஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போனின் ப்ரீ-ஆர்டர் விற்பனை ஜூலை 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர் விற்பனைக்கு வருகிறது. ப்ளிக்கார்ட்டில் ப்ரீ-ஆர்டர் செய்பவர்களுக்கு 3,000 ரூபாய்கான ப்ளிக்கார்ட் வவுச்சர் அளிக்கப்பட உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் குறிப்புகள்
நானோ டூயல் சிம், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ சார்ந்து இயங்கும் கலர்OS 5.1 தொழில்நுட்பத்தில் இயங்க உள்ளது. 6.42 இன்ச், முழு எச்டி (1080x2340 பிக்சல்ஸ்) AMOLED பானல் 19:5:9 ரேடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ 93.8%, ப்ரைட்னெஸ் 430nits, 430ppi பிக்சல் டென்சிட்டி உள்ளது. 64 பிட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 Soc, அட்ரினோ 630 GPU, 8 ஜிபி RAM உடன் வெளிவருகிறது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன், டூயல் கேமரா செட்-அப் கொண்டுள்ளது. 20 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 16 மெகா பிக்சர் ப்ரைமரி சென்சார், f/2.0 அபெர்சருடன், எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது. ‘Al 3D’ கேமரா f/2.0 அபெர்சருடன் 25 மெகா பிக்சல் செல்பி கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமரா ஆப் பயன்படுத்தும் போது கேமரா ஸ்லைடர் திறக்கின்றன. குறிப்பாக, 5 நிமிட சார்ஜிங் செய்துவிட்டு 2 மணி நேரம் பயன்படுத்தி கொள்ளலாம்
4ஜி VoLTE, டூயல் பேண்ட் Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் v5.0 LE, GPS, USB டைப் சி இணைப்புகள் உள்ளது. போன் அளவுகளை பொறுத்த வரை 156.7x74.2x9.6 mm , 186 கிராம் எடை கொண்டுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் சிறப்புகள்
இந்த ஸ்மார்ட் போனின் முக்கியமான ஹைலைட்டாக, செல்பி கேமரா மற்றும் ரியர் கேமராவை, ஸ்லைடருக்கு உள் வைத்து கொள்கிறது. கூடுதலாக, ஓ-பேஸ் அங்கிகார தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த போனில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பிங்கர் ப்ரிண்ட் சென்சார்களை விடவும் பேஸ் சென்சார்கள் 20 மடங்கு வேகமாக செயல்பட கூடியது. குறிப்பாக, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் போன்களில் 3D எமோஜிஸ் நிறுவப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்