ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில் 5 ஜி ஆதரவு உள்ளது. ஓப்போ போன் 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், பல அடுக்கு குளிரூட்டும் முறையைக் கொண்டுள்ளது.
ஓப்போ Find X2 Neoவின் விலை ஜெர்மனியில் யூரோ 699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.58,000) ஆகும். இந்த போன் ஸ்டாரி ப்ளூ மற்றும் மூன்லைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். இந்தியா வெளியீட்டு தேதியை நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
இது ஒற்றை சிம் ஸ்மார்ட்போனாகும். இதில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கலர்ஓஎஸ் 7-ல் இயங்கும். போனின் உள்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
Oppo ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஹூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர் உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 5 ஜி, புளூடூத் 5.1, வைஃபை, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,025 எம்ஏஎச் பேட்டரியும் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஆதரவு உள்ளது. போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ எடை 171 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்