ஓப்போ எஃப்9 ப்ரோ இந்தியாவில் ரூபாய் 2,000 வரை குறைந்துள்ளது. முழுமையாக இந்த விலைக் குறைப்பு இன்னும் அமலாக்கப்படவில்லை என்றாலும், சில ஆன்லைன் தளங்கள் மற்றும் கடைகளில் இந்த தள்ளுபடியைப் பெறலாம். இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த போன் அறிமுகமாகிய நிலையில் இந்த விலை குறைப்பு தற்போது அமலாக்கப்படுகிறது.
சமீபத்திய அப்டேட்டுஸுக்குப் பின்னர் 19,849 ரூபாய்க்கு விலை குறைந்துள்ள ஓப்போ, அமேசான் மற்றும் பேடிஎம் தளங்களில் 19,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பல தரப்பினர் ஓப்போ எஃப் 9 ப்ரோ போனுக்கு விலை தள்ளுபடி செய்திருந்தாலும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் விலையில் ஏதும் மாற்றம் செய்யாமல் ரூபாய் 21,9900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஓப்போ எஃப்9 ப்ரோ அமைப்புக்கள்:
ஆண்டிராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 6.3 இஞ்ச் நீளமாகும். 6ஜிபி ரேமை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி - 256 ஜிபி வரை சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது. இரண்டு பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் 16 மெகா பிக்சல் முதற்கட்ட சென்சாரும், 2 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சாரும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
செஃல்பி கேமராவை பொறுத்தவரை, 25 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் 3,500mAh பேட்டரி வசதியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் செய்யும் புதிய அமைப்பையும் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்