Photo Credit: Oppo
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு பெரிய இடத்தை தக்கவைத்து வரும் ஒப்போ நிறுவனம், இப்போ தன்னோட புதிய F31 சீரிஸ்-ஐ அறிமுகப்படுத்தி மாஸ் காட்டியிருக்கு. இந்த சீரிஸ்ல ஒரே நேரத்துல மூணு புது போன்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்காங்க. அவை: Oppo F31 5ஜி, ஒப்போ F31 ப்ரோ 5ஜி, மற்றும் டாப் எண்ட் மாடலான ஒப்போ F31 ப்ரோ+ 5ஜி. இந்த மூணு போன்களுமே, பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள்ல தனித்துவமா இருக்குறதுதான் இந்த சீரிஸோட பெரிய பிளஸ் பாயிண்ட்.
விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்
Oppo F31 5ஜி: இந்த மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் ரூ. 22,999 விலையில் கிடைக்குது. இதோட விற்பனை செப்டம்பர் 27-ல் தொடங்கும்.
Oppo F31 ப்ரோ 5ஜி: இதுவும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்தான். இதோட விலை ரூ. 26,999. இதோட விற்பனை செப்டம்பர் 19-ல் தொடங்குகிறது.
Oppo F31 ப்ரோ+ 5ஜி: இந்த சீரிஸ்ல இதுதான் டாப் எண்ட் மாடல். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் ரூ. 32,999 விலையில கிடைக்குது. இதோட விற்பனையும் செப்டம்பர் 19-ல் தொடங்குகிறது.
சக்திவாய்ந்த அம்சங்கள்
இந்த சீரிஸ்ல இருக்குற மூணு போன்களோட பெரிய ஹைலைட்டே, அதுல இருக்குற 7,000mAh பேட்டரிதான். ஒரு போனுக்கு இவ்வளவு பெரிய பேட்டரி வர்றது ரொம்பவே அரிதான ஒரு விஷயம். இதன் மூலம், ஒரு முறை சார்ஜ் செய்தால், ரெண்டு நாட்களுக்கு மேல கூட பயன்படுத்தலாம். மேலும், மூன்று போன்களுமே 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் வர்றது ஒரு நல்ல விஷயம்.
Oppo F31 5ஜி: இந்த மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்குது. இது ஒரு 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள் நல்லாவே இருக்கிறதால, பட்ஜெட் விலையில ஒரு நல்ல 5ஜி போன் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான தேர்வா இருக்கும்.
Oppo F31 ப்ரோ 5ஜி: இந்த போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட்டில் இயங்குது. இது F31 மாடலை விட அதிக வேகத்தையும் பெர்ஃபார்மன்ஸையும் கொடுக்கும். இதுல பெரிய பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் கேமரா இருப்பதால், போட்டோகிராஃபி மற்றும் பேட்டரி லைஃப் முக்கியம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷனா இருக்கும்.
Oppo F31 ப்ரோ+ 5ஜி: இந்த மாடல்தான் இந்த சீரிஸ்ல டாப் எண்ட். இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டில் இயங்குது. பெர்ஃபார்மன்ஸ்ல இந்த போன் தான் இந்த சீரிஸ்ல டாப். இது ஒரு பெரிய 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி+ BOE AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கு. இது பெரிய ஸ்கிரீன்ல வீடியோ பார்க்கறதுக்கும், கேமிங்கிற்கும் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்