சீனாவில் இந்த ஓப்போ A9x, 1,999 சீன யுவான்கள்( 20,200 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வெளியான ஓப்போ A9x
ஓப்போ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனான ஓப்போ A9x-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓப்போ A9x, சென்ற மாதம் வெளியான ஓப்போ A9-விட சிறிது மெம்பட்ட மாடலாக உள்ளது. 48 மெகாபிக்சல் கொண்ட இந்த ஸ்மார்போன், 4,020mAh பேட்டரி மற்றும் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 6GB RAM அளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டா-கோர் ப்ராசஸர் கொண்டு செயல்படவுள்ளது.
ஓப்போ A9x-ன் விலை
சீனாவில் இந்த ஓப்போ A9x, 1,999 சீன யுவான்கள்( 20,200 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை(Ice Jade White) மற்றும் கருப்பு(Meteorite Black) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கவுள்ளது. மே 21 அன்று விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை, நீங்கள் தற்பொழுதே, ஓப்போ இ-ஷாப்களில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
முன்னதாக் வெளியான, ஓப்போ A9, 1,799 சீன யுவான்கள்(18,700 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 6GB RAM + 128GB சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், பச்சை(Mica Green), வெள்ளை(Jade White), மற்றும் ஊதா (Fluorite Purple) ஆகிய வண்ணங்களில் வெளியானது.
ஓப்போ A9x-ன் சிறப்பம்சங்கள்!
ஓப்போ A9 போலவே காட்சி அளிக்கும் இந்த ஓப்போ A9x-ல் வாட்டர் ட்ராப் (Waterdrop) நாட்ச், இரண்டு பின்புற கேமரா, பின்புற ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை(Android Pie) அமைப்பைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டா-கோர் ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 6.5 இன்ச் FHD+ திரையை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களையும், 16 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டுள்ளது. 4,020mAh பேட்டரி அளவை கொண்டுள்ள இந்த போன், 4G வசதி கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Challenges India’s Antitrust Penalty Law That Could Cost It $38 Billion: Report
Amazon Black Friday 2025: Early Deals Live; Discounts on PlayStation 5, Smartphones, Laptops and More
Samsung One UI 8.5 Beta Rollout Timeline Revealed in New Leak