ஓப்போவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Oppo A92s சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இது 5ஜி போனாகும். போனில், குவாட் கேமரா தொகுதி உள்ளது மற்றும் முன் இரட்டை துளை-பஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த போன் ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சிஎன்ஒய் 2,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,700),
அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,000) ஆகும்.
இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில், ஏப்ரல் 29 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.
இந்த போன், 120Hz டிஸ்பிளே புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. சதுர வடிவ கேமரா தொகுதிக்குள் இருக்கும் குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இரட்டை செல்ஃபி கேமராக்கள் ஹோல்-பஞ்சில் உள்ளன.
ஓப்போ ஏ 92 எஸ்-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இது பவர் பொத்தானாகவும் இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்