ஓப்போ A7n ஸ்மார்ட்போன் 'வாட்டர்டிராப்' திரை டிசைன் கொண்டுள்ளது.
ஓப்போ நிறுவனத்தின் சார்பில் ஓப்போ ஏ7n ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ஓப்போ தயாரிப்பு மீடியாடெக் ஹீலியோ P35 SoC மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாக கொண்ட ColorOS 5.2.1 மென்பொருளால் இயங்குகிறது. மேலும் இந்த போனின் அமைப்புகள் கடந்த மாதம் சீனாவில் வெளியான AX5 போனை போன்று இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஓப்போ ஏ7n விலை:
சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ள நிலையில், இதன் மதிப்பு ரூ.15,300 ஆக இருக்கக்கூடும் என எதிர்பார்கப்படுகிறது. லேக் லைட் கீரின் நிறத்தில் மட்டுமே வெளியாகும் இந்த ஓப்போ ஏ7n தயாரிப்பின் வெளியாகும் தேதி பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
ஓப்போ ஏ7n அமைப்புகள்:
ஆன்லைனில் வெளியான தகவலின் அடிப்படையில், ஓப்போ ஏ7n ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக ஹைபர் பூஸ்ட் எஞ்ஜின் கொண்டு இயங்குவதாகவும் இது போன்ற அமைப்பை கொண்டிருப்பதால் கேம்களை விளையாடுவதற்கு மிகவும் ஏற்றபடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் இடம் பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு 296 ஃபேசியல் பாயின்ட் செல்ஃபிகளை மேம்படுத்த உதவுகிறது.
இரண்டு சிம் கார்டு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹீலியோ P35 SoC மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாக கொண்ட ColorOS 5.2.1 மென்பொருளால் இயங்குகிறது. வாட்டர் டிராப் ஸ்டைல் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. இரண்டு பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஓப்போ ஏ7n ஸ்மார்ட்போன், 13 மற்றும் 2 மெகா-பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்ஃபிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போனின் முன்புறத்தில் 16 மெகா-பிக்சல் சென்சார் இடம் பெற்றுள்ளது.
64ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4G LTE, புளூடூத் v4.2, மைக்ரோ யுஎஸ்பி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகளை பெற்றுள்ளது. பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இடம் பெற்றுள்ள நிலையில் 4,230mAh பேட்டரி வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்