குவாட் ரியர் கேமராக்களுடன் ஓப்போ ஏ 52 அறிமுகம்! 

ஓப்போ ஏ 52 ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது.

குவாட் ரியர் கேமராக்களுடன் ஓப்போ ஏ 52 அறிமுகம்! 

ஓப்போ ஏ 52 இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ 52, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
  • இந்த போன் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது
  • ஓப்போ ஏ 52, 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது
விளம்பரம்

ஓப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் மற்றும் ஒரு செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இந்த போன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.


ஓப்போ ஏ 52 விலை:

Oppo A52-வின் ஒரே 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 1,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,300) ஆகும். இந்த போன் கருப்பு மற்றும் நீலம் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன் தற்போது சீனாவில் விற்பனைக்கு உள்ளது.


ஓப்போ ஏ 52 விவரங்கள்: 

ஓப்போ ஏ 52, 6.5 இன்ச் (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, கலர்ஓஎஸ் 7.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இந்த போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது.

போனின் பின்புறத்தில் நான்கு கேமரா உள்ளது. முதன்மை ஷூட்டரில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் இரண்டாம் நிலை ஷூட்டரில் 8 மெகாபிக்சல் சென்சார் அடங்கும். ஃபிளாஷ் உடன் செவ்வக கேமரா தொகுதியில் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களும் உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

போனில் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது. இதில், 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போனில், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. இந்த போன் 162.0x75.5x8.9 மிமீ அளவு மற்றும் 192 கிராம் எடையைக் கொண்டுள்ளது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. பட்ஜெட் போன் லிஸ்ட்ல டெக்னோ-வோட அடுத்த ஆட்டம் ஆரம்பம்! ? ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. Spark Go 3 & Pop 20 பத்தின கசிந்த தகவல்கள்
  2. சாம்சங் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்! S26 சீரிஸ் விலை தாறுமாறா ஏறப்போகுது. என்ன காரணம்? இதோ முழு விவரம்!
  3. உங்க சாம்சங் டேப்லெட்டுக்கு புது பவர் வருது! One UI 8.5 டெஸ்ட் பில்ட்ஸ் லீக் ஆகிடுச்சு! என்னென்ன மாஸ் பீச்சர்ஸ் இருக்கு?
  4. ஸ்பீக்கரா இல்ல ஷோ-பீஸா? வீட்டு டிசைனோட அப்படியே கலந்துடுற மாதிரி சாம்சங் கொண்டு வந்திருக்காங்க ‘Music Studio’ சீரிஸ்
  5. ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு புதிய "பேட்டரி அரக்கன்"! ரியல்மி-ல இருந்து 10,001 mAh பேட்டரியோட ஒரு போன் வருது
  6. iPhone Air 2: 2026-ல் அதிரடி லான்ச்! லீக்கர் கொடுத்த ஷாக் நியூஸ்!
  7. லீக்கான நேரடிப் புகைப்படங்கள் OnePlus Turbo First Look: 9000mAh பேட்டரி மற்றும் மாஸ் டிசைன்!
  8. Motorola Signature Series: பிளிப்கார்ட்டில் அதிரடி டீஸர்!
  9. Samsung Galaxy A07 5G: முன்னெப்போதும் இல்லாத பெரிய பேட்டரி வசதி!
  10. Oppo K15 Turbo Pro: 50MP கேமரா மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் - முழு விவரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »