Photo Credit: OnLeaks/ PriceBaba
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது அறிமுகப்படுத்திய ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஆகியவற்றின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro என்ற பெயர்களில் வெளியாகும் என்று பலமுறை வதந்திகள் வெளிவந்தன. இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தற்போது கசிந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டீவ் ஹெமர்ஸ்டோஃபர் (Steve Hemmerstoffer) வெளியிட்டுள்ள இந்த தகவல்களிபடி OnePlus 7T ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் AMOLED திரையை கொண்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், HDR 10+ வசதி மற்றும் 90Hz திரை புதிப்பிப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 855+ எஸ்.ஓ.சி ப்ராசஸர் மற்றும் Adreno 640 GPU கிராபிக்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. OnePlus 7T ஸ்மார்ட்போன் 8GB RAM-உடன், 128GB மற்றும் 256GB என்று இரு சேமிப்பு அளவுகளில் அறிமுகமாகலாம்.
கேமராக்களை பொருத்தவரை, OnePlus 7T மூன்று கேமராக்களை கொண்டிருக்கலாம். 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அளவிலான தொலைதூர கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா. மேலும், முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
OnePlus 7T ஸ்மார்ட்போன் 3,800mAh பேட்டரியுடன், 30W வ்ராப் சார்ஜ் வசதியை கொண்டிருக்கலாம்.
OnePlus 7T Pro 6.65-இன்ச் அளவிலான AMOLED, QHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனும் OnePlus 7T போன்றே இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், HDR 10+ வசதி மற்றும் 90Hz திரை புதிப்பிப்பு விகிதம் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஸ்னேப்டிராகன் 855+ எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்ட OnePlus 7T Pro 8GB RAM, 256GB சேமிப்பு ஆகிய அளவுகளில் அறிமுகமாகலாம்.
OnePlus 7T மூன்று கேமராக்களை கொண்டிருக்கலாம். 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான 3x ஆப்டிகல் ஜூம் தொலைதூர கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான 120டிகிரி வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட வைட்-ஆங்கிள் கேமரா.
OnePlus 7T ஸ்மார்ட்போன் 4,085mAh பேட்டரியுடன், 30W வ்ராப் சார்ஜ் வசதியை கொண்டிருக்கலாம்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 10-ல் அறிமுகமாகி, அக்டோபர் 15 அன்று விற்பனைக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 26-ல் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகின.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்