அந்த சர்வேயின்படி, ஒன்ப்ளஸ் z, 6.55 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் வீதத்துடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் வெளியாகிறது ஒன்பிளஸ் Z; விலை ரூ.25 ஆயிரம் தானா? முழு விவரம்!
சீன நிறுவனமான ஒன்பிளஸ், மொபைல்களின் வரிசையில் புதிதாக வரவிருக்கும் ஒன்பிளஸ் z, குறித்த தகலவகல்கள் மீண்டும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதில், இந்தியாவில் ஒன்பிளஸ் விலை, விவரக்குறிப்புகள், மற்றும் வெளியீட்டு தேதி ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் வந்த தகவல் ஒன்றின் படி, அந்த மொபைலில் மூன்று பின்புற கேமராக்கள், 90 ஹெர்ட்ஸ் வீதத் திரை, டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பலவற்றைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒன்பிளஸ் ஒப்பீட்டளவில் அதிக பட்ஜெட்டுக்கு ஏற்ற மொபைல்களை உருவாக்கிய நாட்களில் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 10 ஆம் தேதி ஒன்பிளஸ் இசட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பிளஸ் இசட் அல்லது அது எப்படி அழைக்கப்பட்டாலும், தேசிடைம்.காமில் பயனர்களில் ஒருவரால் பகிரப்பட்ட ஒரு சர்வேயில் இது காணப்பட்டது. இந்த சர்வே மொபைலின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை பட்டியலிட்டது, அதன் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், கேள்விக்குரிய மொபைல் ஒன்பிளஸ் z, ஒன்பிளஸ் 8 லைட் என்று நம்பப்படுகிறது.
ஒன்பிளஸ் z என்று நம்பப்படும் அந்த ஒன்பிளஸ் மொபைல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.24,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சமீபத்தில் கீக்பெஞ்சில் காணப்பட்டது.
ஆண்ட்ராய்டு சென்ட்ரலின் தனி அறிக்கை, ஜூலை 10ம் தேதி ஒன்பிளஸ் இசட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது. எனினும், விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த தகவல்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதால், இதை ஒரு சிட்டிகையாக எடுத்து கொள்ள வேண்டும். மேலும், அந்நிறுவனம் ஜூலை 2 ஆம் தேதிக்கு ஒரு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது, அங்கு இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி தொடர்களை அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த சர்வேயின்படி, ஒன்ப்ளஸ் z, 6.55 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் வீதத்துடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் இடம்பெறுவதைத் தவிர, 5 ஜி ஆதரவுடன் ஸ்னாப்டிராகன் 765 SoC ஆல் இயக்கப்படலாம். மொபைலின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது,
முதன்மையானது 64 மெகாபிக்சல் சென்சார், அதனுடன் 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. அதில், 16 மெகாபிக்சல் முன் கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30W வேகமான சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் 4,300mAh பேட்டரி மூலம் தொலைபேசியை ஆதரிக்கலாம். ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்ற ஒன்பிளஸ் z, டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கும்.
Editor's Note: The report earlier incorrectly referred to Android Central as Android Authority. The error is regretted
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
NASA’s Curiosity Rover Stalled on Mars for Six Days by Stuck Rock
I Will Find OTT Release Date Revealed: When and Where to Watch Sam Worthington, Britt Lower Starrer Series Online?
Cook with Comali Season 7 is Now Streaming on JioHotstar
Kartavya OTT Release Date Confirmed: When and Where to Watch Saif Ali Khan Starrer Online?