OnePlus நிறுவனம் தனது 'Ace' சீரிஸில் புதிய OnePlus Ace 6 ஸ்மார்ட்போனை சீனாவில் அக்டோபர் 27-ல் வெளியிட உள்ளது
Photo Credit: OnePlus
OnePlus Ace 6 இன் வெள்ளி நிறத்தில் பின்புறம் ACE பிராண்டிங் இருப்பது போல் தெரிகிறது
OnePlus Ace 6 இந்த Ace சீரிஸ் வழக்கமா சைனாவுல மட்டும் லான்ச் ஆகுற ஒரு பவர்ஃபுல் மாடல். ஆனா, இது உலக சந்தையில (Global Market), குறிப்பா இந்தியாவுல OnePlus 15R என்ற பெயர்ல வெளியாக வாய்ப்பு இருக்குன்னு லீக்ஸ் சொல்லுது. Ace 6-ன் டிசைன், OnePlus 15-ஐ போலவே ஒரு புது Square-shaped கேமரா செட்டப் கொண்டிருக்கு. ஆனா, இதுல ரெண்டு கேமரா சென்சார்கள் (Dual Rear Camera) மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கு. கம்பெனி வெளியிட்ட டீஸர்கள்ல இந்த போன், சில்வர் (Silver), ஒயிட் (White), மற்றும் டார்க் ப்ளூ அல்லது பிளாக் (Dark Blue/Black) என மூன்று கலர் ஆப்ஷன்கள்ல வருது. இதுல சில்வர் கலர் மாடலோட பின்னாடி, பளபளன்னு 'ACE' னு பெருசா லோகோ கொடுத்திருக்காங்க. பார்க்கவே ரொம்ப ஸ்டைலா இருக்கு. அதுமட்டுமில்லாம, இது மெட்டல் ஃபிரேம் மற்றும் IP68 ரேட்டிங் கூட கொண்டிருக்குனு எதிர்பார்க்கலாம்.
இந்த போன்ல என்ன பிராசஸர்னு இன்னும் கன்ஃபார்ம் ஆகலைன்னாலும், இதுல Snapdragon 8 Elite (Gen 5 இல்லை) சிப்செட் இருக்கும்னு பல லீக்ஸ் சொல்லுது. இதுவும் ஒரு செம்ம ஃபிளாக்ஷிப் லெவல் பிராசஸர்தான். 16GB வரை RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இந்த Ace 6-இன் மிகப்பெரிய ஹைலைட் இதுதான்! இதில் ஒரு மிகப்பெரிய 7,800mAh பேட்டரி இருக்கிறதா லீக்ஸ் சொல்லுது. இவ்வளவு பெரிய பேட்டரி ஒரு போன்ல வர்றது ஆச்சரியமான விஷயம். அதோட, இந்த பேட்டரியை மின்னல் வேகத்துல சார்ஜ் பண்ண, 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்குன்னு 3C சர்டிபிகேஷன்ல உறுதிப்படுத்தப்பட்டிருக்கு. சார்ஜிங் வேகத்தில இது OnePlus 15-ஐ விட டஃப் கொடுக்கும்னு சொல்லலாம்.
இந்த போன்ல 1.5K ரெசல்யூஷனுடன் கூடிய OLED டிஸ்பிளே இருக்கும். அதோட, ரெஃப்ரெஷ் ரேட் 120Hz அல்லது OnePlus 15-ஐ போலவே 165Hz கூட இருக்கலாம்னு எதிர்பார்க்கலாம். ஸ்கிரீன்லேயே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) இருக்கும்னு சொல்லப்படுது. OnePlus Ace 6 ஸ்மார்ட்போன் அக்டோபர் 27-ஆம் தேதி சைனாவுல OnePlus 15-உடன் சேர்ந்து லான்ச் ஆகுது. இது இந்தியால OnePlus 15R என்ற பெயர்ல வரும்னு எதிர்பார்க்கப்பட்டாலும், எப்போ வரும், எவ்வளவு விலைக்கு வரும்னு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகல. இருந்தாலும், OnePlus 13R (OnePlus Ace 5)-இன் ஆரம்ப விலை சுமார் ₹42,999 ஆக இருந்தது. அதை ஒப்பிடும்போது, இந்த Ace 6 மாடலும் அதே ரேஞ்சில் அல்லது கொஞ்சம் அதிகரிச்சு வரும்னு எதிர்பார்க்கலாம்.
மொத்தத்துல இது பவர், பேட்டரி லைஃப் மற்றும் டிசைன்ல அசத்துற ஒரு பெர்ஃபார்மன்ஸ்-ஓரியண்டட் போன். இந்தியால OnePlus 15R ஆக வரும்போது, நல்ல விலையில் வந்தா கண்டிப்பா மார்க்கெட்ல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்