ஒன்பிளஸ் தரப்பில் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை
Photo Credit: Pricebaba
OnePlus 8T is reported to have a different camera setup than the OnePlus
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஸ்மார்ட்போன் உலகில் முன்னனி நிறுவனமாக ஒன்பிளஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.
கடந்தாண்டு ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனுக்குப் பிறகு ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகமானது. அந்த இரண்டும் நல்ல விற்பனையானது. அதே போல இந்தாண்டும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8Tஸமார்ட்போன் மீது எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 865 SoC பிராசசர் இருக்கலாம் என்றும், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இஷான் அகர்வால் என்பவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 14 ஆம் தேதி ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனின் அறிமுகம் தள்ளிபோயிருக்கலாம். இருப்பினும் ஒன்பிளஸ் தரப்பில் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 ஆக்ஸிஜன் ஓஎஸ் 22
திரை அளவு: 6.55 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசசர்: ஸ்நாப்டிராகன் 865+ SoC
ரேம்: 8ஜிபி
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி சக்தி: 4,500mAh
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Sale Offers
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery