48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
க்ளாசியல் பச்சை, ஆனிக்ஸ் கருப்பு, அல்ட்ரா மரைன் நீலம் ஆகிய 3 வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
ப்ரீமியம் மொபைல்களில் நல்ல விற்பனையை சந்தித்து வரும் ஒன் ப்ளஸ் நிறுவனம் தற்போது 8 ப்ரோ என்ற மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் அமேசான் இணையத்தில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகமே தத்தளித்து வரும் நிலையில், ஒன் ப்ளஸ் மொபைல் விற்பனையையும் கொரோனா பாதித்திருப்பதாகத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன் ப்ளஸ் 8 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் குவாட் கேமரா செட் அப் ஆகியவை உள்ளன. முதன்மை கேமரா 48 மெகா பிக்சல் திறன் கொண்டது.
8 ஜிபி + 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் மெமரி ஆகிய 2 அம்சங்களாக மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மொபைல் ரூ. 54,999க்கும், 12 ஜிபி ரேம் கொண்ட மொபைல் ரூ. 59,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிட்டி பேங்க் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத சேவிங்ஸ் அளிக்கப்படுகிறது. கூடுதலாக அமேசான் பே மூலம் ரூ. 1,000 கேஷ் பேக், ஜியோ பென்ஃபிட்ஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ரூ. 6 ஆயிரம் வரை மிச்சம் செய்யலாம்.
12 மாதங்களுக்கு கட்டணமில்லா ஈ.எம்.ஐ. வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
க்ளாசியல் பச்சை, ஆனிக்ஸ் கருப்பு, அல்ட்ரா மரைன் நீலம் ஆகிய 3 வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
நானோ டூயல் சிம், ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், ஆக்ஸிஜென் ஓ.எஸ்., 6.78 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன்சிறப்பம்சங்கள்.
48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
5 ஜி, 4 ஜி எல்.டி.இ., வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜி.பி.எஸ், யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவை கனெக்டிவிட்டியில் இடம்பெறுகின்றன. 4,510 ஆம்ப்பியர் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
மொத்தம் 199 கிராம் எடை கொண்டதாக இந்த மொபைல்கள் சந்தைக்கு வந்துள்ளன.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force
WhatsApp Testing Username-Based Search and Calling in Latest iOS Beta: Report