ஒன்பிளஸ் 8 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் ஹெட்ஃபோன்களுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலைகள் அமெரிக்காவின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை விட மிகக் குறைவு. இந்தியாவில் ஒன்பிளஸ் 8-ன் புதிய வேரியண்டை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - 6 ஜிபி + 128 ஜிபி. இந்தியாவில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை மற்றும் விற்பனை விவரங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
இந்தியாவில், OnePlus 8-ன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் வேரியண்டின் விலை ரூ.41,999. இது அமேசான் இந்தியாவில் மட்டும் கிடைக்கும். போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை விலை ரூ.44,999 மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்டின் விலை ரூ. 49,999. இந்த இரண்டு வேரியண்டுகளும், அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் குரோமா ஆகியவற்றில் கிடைக்கும்.
இந்த விலைகள் முதலில் ஒன்பிளஸின் ரெட் கேபிள் கிளப் மன்றம் மூலம் வெளிப்படுத்தப்பட்டன, பின்னர் மின்னஞ்சல் அறிக்கையில் ஒன்பிளஸ் இந்தியா உறுதிப்படுத்தியது.
OnePlus 8 Pro-வின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.54,999-யாகவும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.59,999 ஆகவும் உள்ளது. ஒன்பிளஸ் 8 ப்ரோ அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக கிடைக்கும்.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். போன்களின் கிடைக்கும் விவரங்கள் இதுவரை விவரிக்கப்படவில்லை.
இந்தியாவில் OnePlus Bullets Wireless Z விலை ரூ.1,999 ஆகும்.
ஒன்பிளஸ் 8, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 10-ல்இயக்குகிறது. இந்த போன், 6.55 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) திரவ அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனில், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில், 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகிய உள்ளன. இந்த போன், 30/60fps-ல் 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
ஒன்பிளஸ் 8, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 இருவழி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. இதில் வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) ஐ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 160.2x72.9x8.0 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடை கொண்டது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ, டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.78 அங்குல QHD + (1440x3168 பிக்சல்கள்) திரவ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 689 சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 48 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளது. மேலும், கேமரா அமைப்பில் 5 மெகாபிக்சல் “கலர் ஃபில்டர்” கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3x ஹைப்ரிட் சப்போர்ட் மற்றும் 30/60fps-ல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை வழங்குகிறது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.
OnePlus 8 ப்ரோவில், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதை விரிவுபடுத்த முடியாது. இந்த போனில், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில், வார்ப் சார்ஜ் 30 டி (5 வி / 6 ஏ) மற்றும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் ஆதரவுடன், 4,510 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த போன் 165.3x74.35x8.5 மிமீ அளவு மற்றும் 199 கிராம் எடை கொண்டது.
ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2-ல் காணப்படும் அம்சங்களுடன் வருகிறது. Quick Pair சாதனங்களுடன் வேகமாக இணைவதற்கும், Quick Switch செய்வதற்கும் இரண்டு சாதனங்களுக்கு இடையில் எளிதாக மாறுவதற்கு முன்னேறியுள்ளது. இது, வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 55 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. சூப்பர் பேஸ் டோனை தவிர 9.2 மிமீ டைனமிக் டிரைவரும் உள்ளது.
வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் Low Latency மோடும் உள்ளது. இது latency 110 எம்.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசடின் எடை 28 கிராம் ஆகும். மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் வரம்பு 10 மீட்டர் என்று கூறப்படுகிறது. இணைப்பில், புளூடூத் வி 5.0 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். மூன்று சிலிக்கான் இயர்பட்ஸ் பேக்கில் வருகின்றன. இது 10 நிமிட சார்ஜ் கொண்ட 10 மணிநேர music playback-ஐ வழங்குகிறது. இதை முழு சார்ஜ் செய்தால் 20 மணிநேர வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.
Is OnePlus 8 still really a 'flagship killer'? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்