ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விவரங்கள் கசிந்தன! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விவரங்கள் கசிந்தன! 

Photo Credit: Winfuture

ஒன்பிளஸ் 8 மூன்று கலர் வேரியண்டுகளில் வரும்

ஹைலைட்ஸ்
 • ஒன்பிளஸ் 8 ப்ரோவில் 30x டிஜிட்டல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா இருக்கலாம்
 • 1400nits பிரகாசத்துடன் HDR10 + டிஸ்பிளேவுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது
 • ஒன்பிளஸ் 8 ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம்

ஒன்பிளஸ் ரசிகர்களின் பெரிதும் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய, ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 கேமரா விவரக்குறிப்புகள், கலர் வேரியண்டுகள் மற்றும் பல விவரங்கள் கசிந்துள்ளன. 


ஒன்பிளஸ் 8 ப்ரோவின் விவரங்கள்:

பிரைஸ்பாபாவின் கசிவுகள், ஒன்பிளஸ் 8 ப்ரோ, எஃப் / 1.78 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ் 689 முதன்மை சென்சார் இருக்கும் என்று கூறுகின்றன. இரண்டாம் நிலை, எஃப் / 2.2 aperture உடன் 48 மெகாபிக்சல் ஐஎம்எக்ஸ் 586 அல்ட்ரா-வைட் கேமராவாக இருக்கும். மூன்றாவது 8 மெகாபிக்சல் எஃப் / 2.44 டெலிஃபோட்டோ கேமரா 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் கொண்டதாக இருக்கும். கடைசியாக, ஒன்பிளஸ் 8 ப்ரோவில் 5 மெகாபிக்சல் கலர் பில்டர் இருக்கும். டிப்ஸ்டரின் ட்வீட்டின்படி, இந்த போன் எப்போதும் 1400nits பிரகாசத்துடன் எச்டிஆர் 10 + டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8 ப்ரோ பிரஸ் ரெண்டர் சமீபத்தில் கடல் பச்சை கலர் வேரியண்ட் ஆன்லைனில் காணப்பட்டது.


ஒன்பிளஸ் 8-ன் விவரக்குறிப்புகள்:

வின்ஃபியூச்சர் பகிர்ந்த படங்கள், செல்பி ஷூட்டருக்ககாக போனில், ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு இருக்கும் என்று கூறுகின்றன. இஷான் அகர்வால் ட்வீட் செய்த மூன்று கலர் ஆப்ஷன்கள் இருக்கும். அவை Glacial Green, Interstellar Glow மற்றும் Onyx Black என அழைக்கப்படுகின்றன. பிக்டோ என்ற வெளியீட்டின் அறிக்கையின்படி, ஒன்பிளஸ் 8-ல் உள்ள டிரிபிள் கேமரா அமைப்பில் எஃப் / 1.8 aperture உடன் 48 மெகாபிக்சல் கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். பின்புறம் டிரிபிள் கேமரா அமைப்பைக் காட்டும் ஒன்பிளஸ் 8-ன் ரெண்டரையும், முன்பக்கத்திற்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பையும் இந்த வெளியீடு பகிர்ந்து கொண்டது.

OnePlus இந்த முறை ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் உள்ளிட்ட மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் ஒன்பிளஸ் 8 மற்றும் அதன் புரோ வேரியண்ட்டை ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தக்கூடும். அதே நேரத்தில் லைட் வேரியண்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. டிக்டாக்கிற்கு சவால் விடும் 'மித்ரன் ஆப்'! - 50 மில்லியன் பதிவிறக்கத்தை கடந்தது!!
 2. டிரிபிள் ரியர் கேமராக்களுடன் மோட்டோ ஜி புரோ அறிமுகம்!
 3. இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்!
 4. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!
 5. 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!
 6. சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!
 7. 4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!
 8. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
 9. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com