Photo Credit: Twitter/ Max J.
ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். உயர்நிலை வேரியண்டுகள் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒன்பிளஸ் 8 லைட் வெளியீடு பல மாதங்கள் தாமதமாகும். இந்த மாதத்தில் மூன்று போன்களையும் ஒன்றாக அறிமுகம் செய்வதாக நிறுவனம் தெரிவித்தது. ஆனால், COVID-19 பாதிப்பால் வெளியீடு தாமதமானது.
டிப்ஸ்டர் மேக்ஸ் ஜே. ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஒரு கருத்துப் படத்தைப் பகிர்ந்துள்ளார். இது OnePlus 8 சீரிஸின் புதிய வெளியீட்டு தேதி என்று வதந்தி பரப்பப்படுகிறது. மற்ற அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் இப்போது செய்து வருவதைப் போலவே, நிறுவனம் ஆன்லைனில் மட்டுமே நிகழ்வை வழங்கும். இந்த ஆன்லைன் நிகழ்வில், நிறுவனம் ஒன்பிளஸ் 8 மற்றும் OnePlus 8 Pro-வை அறிமுகப்படுத்தும் என்றும், OnePlus 8 Lite பல மாதங்கள் தாமதத்தைக் காணும் என்றும் வின்ஃபியூச்சர் (WinFuture) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, OnePlus உற்பத்தி சிக்கல்களுடன் போராடி வருவதாகவும், அந்த காரணத்திற்காக, அதன் முந்தைய திட்டமிடப்பட்ட ஒன்பிளஸ் 8 வெளியீட்டை மார்ச் மாதத்தில் நடத்த முடியவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது. ஒன்பிளஸ், சீனாவில் அதன் போன்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் இருந்து பெரும்பாலான தயாரிப்பு வளர்ச்சியையும் கையாளுகிறது.
ஏப்ரல் பிற்பகுதியில் இந்த வெளியீடு நிகழக்கூடும் என்றாலும், போன்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. உண்மையான விற்பனை தேதியில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் 8 லைட் வெளியீடு ஜூலை வரை தாமதமாகலாம். இந்த போன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும். மேலும், மீடியாடெக்கின் டைமன்சிட்டி 1000 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ போன்கள் ஸ்னாப்டிராகன் 865 SoC-ல் இயக்கப்படுகின்றன, மேலும் 5ஜி ஆதரவுடன் வருகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்