ஒன்பிளஸ் 8 ப்ரோவின் ஆரம்ப விலை யூரோ 919 - யூரோ 929-யாகவும், ஒன்பிளஸ் 8 விலை யூரோ 719 - யூரோ 729-யாகவும் வதந்தி பரவுயுள்ளது
ஒன்பிளஸ் 8 சீரிஸ், உயர்மட்ட விவரக்குறிப்புகளுடன் வரும். இது போனின் விலையில் தக்கத்தை ஏற்படுத்தும்
ஒன்பிளஸ் ஏப்ரல் 14-ஆம் தேதி ஒன்பிளஸ் 8 சீரிஸ் வெளியீட்டை நடத்துகிறது. ஆனால் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விலை விவரங்கள் ஆன்லைனில் லீக்கானது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8-ன் விலை விவரங்களை ஒன்பிளஸ் இதுவரை வெளியிடவில்லை. ஒன்பிளஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் (Pete Lau) ஊடக நேர்காணலில் ஒன்பிளஸ் 8 சீரிஸின் விலை 1,000 டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.76,400) இருக்காது என்று உறுதிப்படுத்தினார்.
லீக்கான விலைகள், ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் Alsa.sk அதன் வலைத்தளத்தில் ஒன்பிளஸ் 8 மாடல்களை சுருக்கமாக பட்டியலிட்டுள்ளது. அவற்றின் விலைகளை காணலாம்.
ஐரோப்பாவில் OnePlus 8 Pro-வின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை யூரோ 919 - யூரோ 929 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.76,000-76,900)-யாகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை யூரோ 1,009 - யூரோ 1,019 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.-83,500-84,400)-யாகவும் இருக்கலாம்.
OnePlus 8, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் யூரோ 719 - யூரோ 729 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,500-60,400)-யாகவும், அதன் டாப்-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் யூரோ 819 - யூரோ 829 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.67,800-68,700) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8-ன் விவரங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find N5, Find X8 Series, and Reno 14 Models to Get ColorOS 16 Update in November: Release Schedule