OnePlus 6T மற்றும் OnePlus 6 ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 10.3.1 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளன. சமீபத்திய மென்பொருள் அப்டேட் OnePlus 6T மற்றும் OnePlus 6 ஆகிய இரண்டிற்கும் அசல் ஆண்ட்ராய்டு 10 வெளியீட்டின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பிழை திருத்தங்களின் பட்டியலைக் கொண்டுவருகிறது. கூடுதலாக, ஒன்பிளஸ், இந்த அப்டேட்டில் டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் OnePlus 6T மற்றும் OnePlus 6 பயனர்கள் புதிய OxygenOS பதிப்பின் மூலம் பாதுகாப்பு மேம்பாடுகளைப் பெறுவார்கள். இந்த அப்டேட் தேதியிட்ட ஒன்பிளஸ் போன்களிலும், வைஃபை இணைப்பை உறுதிப்படுத்துகிறது.
OnePlus குழு தனது அதிகாரப்பூர்வ மன்றத்தின் மூலம் வழங்கிய changelog-ன் படி, OnePlus 6T மற்றும் OnePlus 6-க்கான OxygenOS 10.3.1 அப்டேட், கைரேகையைப் பயன்படுத்தி சாதனத்தைத் திறந்த பிறகு கருப்புத் திரை தோற்றத்தை ஏற்படுத்தும் சிக்கலை சரிசெய்கிறது. இந்த அப்டேட், துவக்கத் திரையில் தோன்றும் அனிமேஷன் லோகோ தொடர்பான சிக்கலைக் குறிக்கிறது மற்றும் சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட வன்பொருளின் வெப்ப சிக்கலை சரிசெய்கிறது.
OnePlus 6T மற்றும் OnePlus 6-க்கான OxygenOS 10.3.1 அப்டேட் 5GHz ஹாட்ஸ்பாட் உடன் சீரற்ற துண்டிப்பு சிக்கலை சரிசெய்கிறது மற்றும் புரோ கேமரா மோடில் பட முன்னோட்ட நேரத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது கேமரா செயலிழப்பு சிக்கலை நிவர்த்தி செய்கிறது மற்றும் கேலரியில் உள்ள வீடியோக்கள் மற்றும் படங்களின் காட்சிநிலை தொடர்பான சிக்கலை சரிசெய்கிறது.
இந்த அப்டேட், கணினி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் OnePlus 6T மற்றும் OnePlus 6 இரண்டிலும் பொதுவான பிழைகளை சரிசெய்கிறது என்பதையும் ஒன்பிளஸ் சேஞ்ச்லாக்கில் சிறப்பித்துள்ளது.
"இந்த OTA ஒரு அரங்கேற்றப்பட்ட வெளியீட்டைக் கொண்டிருக்கும். OTA இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களால் பெறப்படும். மேலும், முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் சில நாட்களில் பரந்த அளவில் வெளியேறும் ”என்று ஒன்பிளஸ் குழு ஒரு மன்ற பதிவில் குறிப்பிட்டுள்ளது.
நீங்கள், OnePlus 6T மற்றும் OnePlus 6 பயனராக இருந்தால், Settings menu-வுக்குச் சென்று உங்கள் சாதனத்தில் சமீபத்திய OxygenOS அப்டேட்டை சரிபார்க்கலாம்.
நினைவுகூர, ஒன்பிளஸ், OxygenOS 10.0-ஐ (released OxygenOS 10.0) நவம்பரில் வெளியிட்டது. இது ஆண்ட்ராய்டு 10-ஐ OnePlus 6T மற்றும் OnePlus 6-க்கு கொண்டு வந்தது. ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் OxygenOS 10.3.0 அப்டேட்டை பெற்றன. இது notch-ஐ மறைக்கும் ஆப்ஷனை சேர்த்தது மற்றும் நவம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சையும் உள்ளடக்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்