The price in India is Rs. 39,999 for OnePlus 6 Silk White Limited Edition handset
ஜூன் 5-ம் தேதி நள்ளிரவில் இந்திய மொபைல் சந்தையில் புது வரவாகக் களம் இறங்கியுள்ளது ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட். குறைந்த எண்ணிகையிலேயே களம் கண்டுள்ள ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட் மொபைல் போன் ஒன் ப்ளஸ் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விற்பனைச் சந்தையில் அமேசான்-ல் மட்டும் விற்பனைக்கு உள்ளது. அதுவும் மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான். ஒன் ப்ளஸ் 6 நான்கு வண்ணங்களில் உள்ளது. மிரர் ப்ளாக், மிட்நைட் ப்ளாக், சில்க் வொய்ட் மற்றும் மார்வெல் அவெஞ்சர்ஸ் என குறிப்பிட்ட நிறங்களே உள்ளன.
கைக்கு அடக்கமான இந்த மொபைல் அமைப்பு ஐ- போன் உடன் ஒத்துப்போவதாக உள்ளது. முன் மற்றும் பின் பக்க கேமிரா வசதி உள்ளது. ஒன் ப்ளஸ் 6 சில்க் மார்வெல் அவெஞ்சர்ஸ் மொபைல் 8 ஜிபி ராம் வசதி உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 44,999 ரூபாய் என்ற விலைக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட் மொபைலின் இந்திய விலை 39,999 ரூபாய் ஆக உள்ளது. ஒன் ப்ளஸ் ஸ்டோர்களில் மொபைல் வாங்கும் போது சிட்டி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குவோருக்கு 2,000 ரூபாய் பணம் திரும்பத் தரப்படுகிறது. ஐடியா சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 2,000 ரூபாய் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்