ஒன்ப்ளஸ் 6 மாடலில் மிட்நைட் ப்ளாக், மிரர் ப்ளாக் மற்றும் சில்க் வைய்ட் வரிசையில் வரும் நான்காவது கலர் மாடலாக சிவப்பு வர இருக்கிறது
ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலில் மிட்நைட் ப்ளாக், மிரர் ப்ளாக் மற்றும் சில்க் வைய்ட் வரிசையில் வரும் நான்காவது கலர் மாடலாக சிவப்பு வர இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மார்வெல் அவென்ஜர்ஸ் மாடலும் சமீபத்தில் வெளியிடப்பட்டு விரைவிலே நிறுத்தப்பட்டது.
ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷனில் மெட்டாலிக் ரெட் ஷிம்மர், அதே நிறத்தில் பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ரெட் மாடல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 5டி லாவா ரெட் மாடலை விட முற்றிலும் வேறுபட்டது.
ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் இந்தியா விலை மற்றும் சிறப்பு :
ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம்/128 ஜிபி உள்நினைவகத்திறன் கொண்ட மாடலில் மட்டுமே வருகிறது. இதன் விலை ரூ. 39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஜூலை 16ம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்ப்ள்ஸ்.இன் மற்றும் அமேசான்.இன் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வருகிறது.
எனவே ஹச்டிஎஃப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் மூலம் மொபைலை ஈஎம்ஐயில் வாங்குபவர்களுக்கு ரூ. 2,0000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது, இது மற்ற ஒன்ப்ளஸ் 6 மாடல்களுக்கும் பொருந்தும்.
ஒன்ப்ளஸ் 6 ரெட் வடிவமைப்பு:
ஒன்ப்ளஸ் 6 டுயல் நேனோ சிம் வசதியுடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் 5.1, ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ மாடலுடன் வருகிறது. 6.28 இன்ச் (1080*2280 பிக்ஸல்ஸ்) முழு ஹச்டி ஆப்டிக் அமோலெட் பேனல் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி ப்ராசஸர் 6 ஜிபி/ 8 ஜிபிரேம் மற்றும் 64 ஜிபி/ 128 ஜிபி/ 256 ஜிபி மாடல்களுடன் வருகிறது.
ஒன்ப்ளஸ் 6 மாடலில் டுயல் ரியர் கேமரா உள்ளது, இதில் முன்பகுதி கேமரா 16 மெகா பிக்ஸல் சோனி ஐஎம்எக்ஸ் 159 சென்சார், எஃப்/1.7 அப்பெர்ட்சர் உடனும், பின்புற கேமரா 20 மெகா பிக்ஸல் சோனி ஐஎம்எக்ஸ்376கே சென்சார் இரண்டுமே டுயல் எல்ஈடீ ஃப்ளாஷுடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு 16 மெகாபிக்ஸல் சோனி ஐஎம்எக்ஸ்371 சென்சார் எஃப்/2.0 அப்பெர்ட்சர் உடன் வருகிறது. 3300 எம்ஏஹச் பேட்டரி வசதியுடன் வருகிறது.
ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் 4ஜி வோல்ட் டுயல் பேண்ட் வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வெர்ஷன் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி மற்றும் 3.5 மிமி ஆடியோ ஜாக் உள்ளது. ஒரு கைரேகை சென்சார் மற்றும் முகத்தை அடையாளும் காணும் சென்சார் (செல்ஃபி கேமராவின் மூலம் செயல்படக்கூடிய) உள்ளது. ஒன்ப்ளஸ் 6 155.7*75.4*7.75மிமி பரிமாணத்தில் மற்றும் 177 கிராம் எடையுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online