Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ

OnePlus 15 Flagship Phone Snapdragon 8 Elite Gen 5 ப்ராசஸர், 7,300mAh பேட்டரி மற்றும் 50MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது

Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ

Photo Credit: OnePlus

OnePlus 15, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சதுர மூன்று-பின்புற கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Snapdragon 8 Elite Gen 5: இந்தியாவில் இந்த ப்ராசஸருடன் அறிமுகமாகும் முதல்
  • 7,300mAh பேட்டரி + 120W ஃபாஸ்ட் சார்ஜிங்: சார்ஜிங் ஸ்பீடில் புதிய சாதனை
  • மிகவும் மிருதுவான யூஸர் அனுபவத்தை வழங்கும். கேமிங்குக்கு அல்டிமேட் சாய்ஸ்
விளம்பரம்

OnePlus பிரியர்களுக்கு ஒரு செம மாஸ் செய்தி! OnePlus-ன் அடுத்த Flagship மாடலான OnePlus 15 இந்தியாவில் லான்ச் ஆகுறதுக்கான தேதி அறிவிச்சாச்சு. அடுத்த மாசம் நவம்பர் 13-ம் தேதி இந்த போன் இந்தியாவுக்கு வரப்போகுது. இது ஒரு சாதாரண லான்ச் இல்ல... ஏன்னா, இந்தியாவிலேயே Snapdragon 8 Elite Gen 5 ப்ராசஸருடன் வரும் முதல் போன் இதுதான்!முதல்ல பெர்ஃபார்மன்ஸ் பத்தி பேசியே ஆகணும். Qualcomm-ன் லேட்டஸ்ட் அண்ட் பவர்ஃபுல் சில்லான Snapdragon 8 Elite Gen 5 இதில் இருக்கு. இது 3nm டெக்னாலஜியில் உருவானது. பெர்ஃபார்மன்ஸில் புதிய உச்சத்தை எட்டும்னு எதிர்பார்க்கலாம். கேமிங், மல்டி டாஸ்கிங் என எது செஞ்சாலும் ஸ்பீடா இருக்கும். கூடவே 16GB LPDDR5x RAM மற்றும் 1TB UFS 4.1 ஸ்டோரேஜ் வரைக்கும் ஆப்ஷன்கள் இருக்கு. இது Android 16 அடிப்படையிலான OxygenOS 16-ல் இயங்குகிறது.


அடுத்த பவர் செக்ஷன் பேட்டரி. இந்த போன்ல 7,300mAh மெகா பேட்டரி கொடுத்திருக்காங்க. இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண, 120W Super Flash Charge Wired Charging மற்றும் 50W Wireless Flash Charge சப்போர்ட்டும் இருக்கு. ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்க!
டிஸ்பிளேயை பத்தி பேசணும்னா, அதுவும் ஒரு பிளாக் பஸ்டர்தான். இதுல 6.78 இன்ச் 1.5K BOE Flexible AMOLED டிஸ்பிளே கொடுத்திருக்காங்க. இதன் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் ரொம்பவே ஹைலைட். ஸ்க்ரோலிங், வீடியோஸ், கேம்ஸ் எல்லாமே தண்ணீர் மாதிரி ஸ்மூத்தா இருக்கும். கூடவே 1,800 nits பீக் ப்ரைட்னெஸும் இருக்கு.


கேமராவைப் பொறுத்தவரை, பின்னாடி சதுர வடிவிலான கேமரா மாட்யூல் இருக்கு. இதில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கு. அதாவது, மெயின் கேமரா, அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் டெலிஃபோட்டோ கேமரா என மூன்றுமே 50 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருது. OnePlus-ன் புதிய DetailMax image engine இதில் இருப்பதால், போட்டோ குவாலிட்டி ரொம்பவே பிரமாதமா இருக்கும்னு நம்பலாம்.


இந்த போன் Absolute Black, Misty Purple, மற்றும் Sand Dune என மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும்னு சொல்லியிருக்காங்க. சீனாவில் இதன் ஆரம்ப விலை தோராயமாக ₹50,000-ல் இருந்து ₹67,000 வரை இருக்கு. இந்தியாவில் இதன் விலை எப்படி இருக்கும்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும். Amazon மற்றும் OnePlus-ன் ஆன்லைன் ஸ்டோர்ல இது விற்பனைக்கு வரும். இந்த Flagship Phone வாங்க நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க!

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »