Photo Credit: OnePlus
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13 செல்போன் பற்றி தான்.
OnePlus 13 செல்போன் Launch Date எப்போது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகிறது. முதன் முதலில் சீனாவில் நடந்த இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் BOE X2 டிஸ்ப்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
OnePlusநிறுவனம் வெளியிட்ட தகவல்படி, அக்டோபர் 31 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. . மேம்படுத்தப்பட்ட கணினி அனுபவம், கேம் செயல்திறன், திரை காட்சி மற்றும் கண் பாதுகாப்பு, பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங் மற்றும் இமேஜிங் திறன்களுடன் இந்த செல்போன் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலம், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேமராயூனிட் இருக்கும் பகுதி வெள்ளை நிறத்தில் உள்ளது. இரட்டை வண்ணங்கள் கொண்ட மாடல்களும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. OnePlus 13 கேமரா யூனிட் சிறிது மாற்றப்பட்டு, இப்போது ஸ்மார்ட்போனின் மற்ற சட்டகத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இது செல்போன் சேஸ்ஸுடன் இணைந்து தோன்றுவதற்குப் பதிலாக, அது ஒரு தனி வட்ட வடிவமாக இடதுபுறத்தில் இடம்பெற்றுள்ளது. Hasselblad என்கிற அம்சம் மூலம் பிராண்டிங் கேமரா யூனிட்டிலிருந்து வெளியே நகர்த்தப்பட்டு மேல் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வடிவமைப்பு அதன் முந்தைய மாடல் செல்போன்களை போலவே உள்ளது.
OnePlus 13 செல்போன் 6.82-இன்ச் 2K 10-பிட் LTPO BOE X2 மைக்ரோ குவாட் வளைந்த OLED திரையுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 24GB வரை ரேம் மற்றும் 1TB வரையிலான மெமரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50-மெகாபிக்சல் Sony LYT-808 முதன்மை சென்சார், கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக OnePlus 13 செல்போன் புதிய லோக்கல் அப்டேட் அம்சத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அக்டோபர் 31 அன்று அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக சீனாவில் நடைபெற்ற Peacekeeper Elite 2024 விழாவில் OnePlus 13 முதலில் காணப்பட்டது என சீன சமூக ஊடக தளமான வெய்போவில் தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்