வோடஃபோன் டை அப்புடன் நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் போன் விரைவில் இந்தியாவில் வெளிவரவுள்ளது. தற்போது இந்த போன் ஸ்பெயினில் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசசர், 48 மெகா பிக்சல் கேமரா உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். மார்ச் மாதம் இந்த போன் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது.
6.5 இன்ச் ஓலெட் டிஸ்ப்ளே, 240 ஹெர்ட்ஸ் டச் செட்டிங் கொண்டதாக மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. 4 கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் மாதம் தோறும் 17 ஈரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,400க்கு 36 மாத கான்ட்ராக்ட் அடிப்படையில் இந்த போன் விற்பனைக்கு வந்தது. மொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 612 யூரோ செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 52,200 ஆகும்.
நூபியா ரெட் மேஜிக் 5 ஜி லைட் போன் கருப்பு வண்ணத்தில் சந்தையில் கிடைக்கிறது.
8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜிபி இன்பீல்ட் மெமரியை கொண்டது இந்த ப்ரீமியம் போன்.
பின்பக்கம் 48 மெகா பிக்சல் கேமரா, முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமரா, இரு 2 மெகா பிக்சல் கேமரா ஆகியவை செம மாஸான புகைப்படங்களை எடுக்க உதவும்.
நூபியா ரெட் மேஜிக் 5ஜி லைட்டில் 5100 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இது சப்போர்ட் செய்யும். மொத்தம் 215 கிராம் எடை கொண்டது இந்த போன்.
.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்