ஸ்மார்ட்போன்கள் அதிகம் பயன்படுத்தப்படும் கேஜெட்களில் ஒன்றாகும், இது தானாகவே கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களுக்கு மிகவும் வெளிப்படும்.
2003-ஆம் ஆண்டு WHO ஆய்வின்படி, SARS-CoV வைரஸ் ஒரு கண்ணாடி மேற்பரப்பில் 96 மணி நேரம் இருக்க முடியும்.
நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவிவரும் நிலையில், நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் கொரோனா வைரஸ் வந்தால் என்ன செய்வது? அப்படி வைரஸ் தொற்றிக்கொண்டால், அவை எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்? என்ற அச்சம் அனைவரிடத்திலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்றை தவிர்க்க ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது? எப்படி கையால்வது என்பது போன்ற பல குழப்பங்களுக்குமான தீர்வு இதோ உங்களுக்காக!
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வில், SARS- CoV வைரஸைப் போலவே, coronavirus (SARS-CoV-2) ஸ்டீல் மற்றும் கடினமான பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் சுமார் 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) வாழும் என்று கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ், அட்டை மேற்பரப்பில் சுமார் 24 மணிநேரமும், தாமிரத்தில் சுமார் 4 மணி நேரமும் வாழும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் NIH ஆய்வில் கூறப்பட்டுள்ளது. , ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்பு கொண்ட, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட் / மடிக்கணினி போன்ற அனைத்து கேஜெட்டிற்கும் வரலாம்.
நாம், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போனை, ஈரமான மைக்ரோஃபைபர் துணியால் மேற்பரப்பைத் துடைக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள ஓலியோபோபிக் கோட்டிங் இவற்றை அழிக்கக்கூடும் என்பதால், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் screen protector-ஐ இன்ஸ்டல் செய்யலாம், அதற்கு பதிலாக இதை சுத்தம் செய்யலாம், இதனால் டிஸ்பிளே கோட்டிங் சேதமடையாது.
ஐபோன் சாதனத்தை, "70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் துடைப்பான் / க்ளோராக்ஸ் கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தி, காட்சி, விசைப்பலகை / பிற வெளிப்புற மேற்பரப்புகள் போன்வற்றை துடைக்கலாம். ப்ளீச் பயன்படுத்த வேண்டாம். போனை திறக்கும் போது, ஈரப்பதம் ஆவதை தவிர்க்கவும். ஆப்பிள் தயாரிப்பை சுத்தம் செய்ய எந்த முகவர்களிடமும் கொடுக்காதீர்கள். துணி அல்லது தோல் மேற்பரப்பை பயன்படுத்த வேண்டாம்" என்று ஆப்பிள் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold to Be Produced in Limited Quantities; Samsung Plans to Review Market Reception: Report