டிஸ்ப்ளே நாட்ச், டுயல் ரியர் கேமராவுடன் நோக்கியா எக்ஸ் வெளியீடு

டிஸ்ப்ளே நாட்ச், டுயல் ரியர் கேமராவுடன் நோக்கியா எக்ஸ் வெளியீடு
ஹைலைட்ஸ்
  • நோக்கியா எக்ஸ்5 இரண்டு ரேம்/ஸ்டோரேஜ் வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது
  • ஹீலியோ பி60 எஸ்ஓசி சிப் ஆண்ட்ராய்ட் 8.1ஓரியோ இயங்குதளத்தில் செயல்படுகிறது
  • சீனாவில் நோக்கியா எக்ஸ்5 விலை சீன யூவான் 999ல் தொடங்குகிறது
விளம்பரம்

நோக்கியா எக்ஸ்5 மொபைலை ஹச்எம்டி குளோபல் நிறுவனம் சீனாவில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் டுயல் ரியர் கேமரா, டிஸ்ப்ளே நாட்ச் கொண்டு ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படுகிறது. இந்த மொபைல் நோக்கிய எக்ஸ் வரிசையில் இரண்டாவது ஸ்மார்ட்போன், முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நோக்கியா எக்ஸ் 6 முதல் மாடலாக வெளியிடப்பட்டிருந்தது. நோக்கியா மொபைல் மாடல்களில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டு முதல் வந்தது நோக்கியா எக்ஸ் 6 தான். ஹம்டி குளோபல் நோக்கிய எக்ஸ்5 விலை, இறுப்பு மற்றும் ஸ்பெசிஃபிகேஷன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

நோக்கியா எக்ஸ்5 விலை மற்றும் கிடைக்கக்கூடிய தன்மை

நோக்கியா எக்ஸ் 5, 3 ஜீபி ரேம்/ 32 ஜீபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜீபி ரேம்/64 ஜீபி ஸ்டோரேஜ் என இரு மாடல்களில் முறையே சீன யுவான் 999 (தோராயமாக ரூ. 9,999 மற்றும் சீன யுவான் 1,399 (தோராயமான ரூ. 13,999) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 19 முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவுகள் சூனிங்.காம் இணையதளத்தில் தொடங்கியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நைட் ப்ளாக், பால்டிக் சீ ப்ளூ மற்றும் க்ளேசியர் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

நோக்கியா எக்ஸ்5 வடிவம்

நோக்கியா எக்ஸ்5ல் பாலிகார்பனேட் ஃப்ரேமுடன் இருபுறம் கண்ணாடியால் ஆன உடல் பகுதியால் தயார் செய்யப்பட்டிருக்கிறது. முன்பக்கம் ஒரு டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் கீழ் பகுதியில் நோக்கியா லோகோ இடம்பெற்றுள்ளது, மற்றும் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ 84% இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பின்பக்கமும் லோகோ மற்றும் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. நேராக பொருத்தப்பட்டுள்ள டுயல் கேமரா சென்சார், கைரேகை சென்சார் மற்றும் லோகோ இவை அனைத்தும் பின்பகுதியின் மத்தியில் வரிசையாக இருக்கிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது புற விளிம்பில் இருக்க, 3.5 மிமி ஆடியோ ஜேக் ஒன்று மட்டும் மேற்பக்கத்தில் இருக்கின்றது.

நோக்கியா எக்ஸ் 5 ஸ்பெசிஃபிகேஷன்

குறிப்பிட்டுள்ளதைப் போல நோக்கியா எக்ஸ் 5 ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படுகிறது, மேலும் விரைவான ஆண்ட்ராய்ட் அப்டேட்கள் கிடைக்கும் என ஹம்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. டுயல் சிம் (இரண்டுமே 4 ஜீ சப்போர்ட்) 5.86 இன்ச் ஹச்டி+ 2,5 டி க்ளாஸ் பாதுகாப்புடன் 720*1520 பிக்ஸல்ஸ் டிஸ்ப்ளே, 19:9 அஸ்பெக்ட் ரேஷியோ, 84% ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.  இதில் மீடியாடெக் ஹீலியோ பி60 ஆக்டா கோர் எஸ்ஓசி மற்றும் 3 ஜீபி ரேம்/ 32 ஜீபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜீபி ரேம்/64 ஜீபி ஸ்டோரேஜ் என இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 256 ஜீபி ஸ்டோரேஜ் எக்ஸ்டென்ஷன் செய்துகொள்ளும் வசதி கிடைக்கிறது.

பின்புறக் டுயல் ரியர் கேமராவில், 13 மெகா பிக்ஸல் ரியர் மெய்ன் சென்சார் எஃப்/2.0 அப்பெர்ட்சர் உடன் மற்றும் 5 மெகா பிக்ஸல் செகண்டரி லென்ஸ் உள்ளது. இந்த இரண்டு சென்சார்களுக்கு கீழுமே ஒரு எல்ஈடி ஃப்ளாஷ் உள்ளது. முன்புறம் எஃப்/2.2 அப்பெர்ட்சர் மற்றும் 80.4 டிகிரி கோண பார்வை கொண்ட 8 மெகாபிக்ஸல் லென்ஸ் ஒன்றும் இருக்கிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், பில்ட் இன் போர்ட்ரெய்ட் பேக்ரவுண்ட் ப்ளர் செய்யும் வசதி. போர்ட்ரெய்ட் ஸ்கின் மோட், ஹச்டிஆர் மோட் மற்றும் இதர அம்சங்களும் இருக்கிறது.

நோக்கியா எக்ஸ் 5 3060 எம்ஏஹச் பேட்டரி வசதி கொண்டுள்ளது, இது 27 மணி நேர லைஃப் டைம், 17.5 மணிநேர டாக் டைம், 19.5 மணி நேர ம்யூசிக் ப்ளேபேக், கேமிங்கில் 5.8 மணி நேரம் மற்றும் வீடியோ ப்ளேபேக்கில் 12 மணி நேரங்கள் நிலைத்திருக்கும். கனக்டிவிட்டியில் யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமி ஆடியோ ஜேக், ப்ளூடூத் 4.2, ஜீபிஎஸ், ஏ-ஜீபிஎஸ், வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என்/ஏசி, எப்ஃஎம் ரேடியோ, டுயல் 4ஜீ வோல்ட் ஆகியவை உள்ளது. நோக்கியா எக்ஸ்5ன் அளவு 149.51*71.98*8.096மிமி என்கிற் அளவில் இருக்கிறது. ஆன்போர்ட் சென்சார்களில் ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆக்செலரோமீட்டர், டிஜிட்டல் திசைகாட்டி, கிரையோஸ்கோப் அருகாமை சென்சார் ஆகியவை உள்ளது. மேலும் பின்புற பேனலில் கைரேகை சென்சாரும் இருக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HMD Global, Nokia
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »