புதிய நோக்கியா 9.3 ப்யூர் வியூ, 120Hz டிஸ்பிளேவைக் கொண்டதாக புதிய கசிவில் தெரியவந்துள்ளது. இந்த போன் 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பின்புற சென்சார்களின் வரிசையையும் கொண்டிருக்கும். அதில் ஒன்று ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (OIS) ஆதரவையும் வழங்கும். இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை வழங்கக்கூடும்.
இந்த போன் OIS-ஐ வழங்கும் என்றும் நோக்கியா அறிவுறுத்துகிறது. ஆனால், ஒரு கேமரா மட்டுமே அதை ஆதரிக்கும். நோக்கியா 9.3 பியூர்வியூவின் பத்து முன்மாதிரிகளை எச்எம்டி குளோபல் உருவாக்கியுள்ளது. மேலும், நிறுவனம் 20 மெகாபிக்சல், 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் சென்சார்களையும் சோதித்து வருகிறது.
HMD Global-ன் வரவிருக்கும் போனை பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் நோக்கியா பகிர்ந்துள்ளது. நோக்கியா 9.3 ப்யூர் வியூ, சாம்சங்கிலிருந்து 108 மெகாபிக்சல் சென்சார் அல்லது சோனியிலிருந்து 64 மெகாபிக்சல் சென்சார் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சென்சார்களில் ஒன்று போனுடன் ஒருங்கிணைக்கப்படலாம் மற்றும் வீடியோ படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்