நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆரம்பத்தில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, விநியோகச் சங்கிலி சிக்கல்களால் நோக்கியா 9.3 ப்யூர் வியூ வெளியீடு மேலும் தாமதமாகியுள்ளது. போனின்
நோக்கியாபவர்யூசரின் அறிக்கையின்படி, எச்எம்டி குளோபல் இன்னும் Nokia 9.3 ப்யூர் வியூ ஃபிளாக்ஷிப்பை பணியில் வைத்திருக்கிறது. இது 2020-ஆம் ஆண்டின் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்படலாம். ஆனால், எச்எம்டி குளோபல் நிறுவனத்திடமிருந்து எந்த உறுதியும் உறுதிப்படுத்தலும் இல்லை. இந்த தாமதத்திற்கு காரணம், அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் வெடிப்பு பல தொழில்களுக்கான விநியோக சங்கிலியில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தகவல்கள் இந்த போன் ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் வரலாம்.
இந்த போன் நோக்கியா 9.1 ப்யூர் வியூ அல்லது நோக்கியா 9.2 ப்யூர் வியூ என்று அழைக்கப்படுமா என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், வரவிருக்கும் போனானது நோக்கியா 9.3 ப்யூர் வியூ என்று அழைக்கப்படும் என்று ஃபோன் அரீனாவின் அறிக்கை கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்